உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி பதவியேற்பு - யார் இந்த சஞ்சீவ் கன்னா?
சஞ்சீவ் கன்னாவுக்கு அடுத்த ஆண்டு மே 13-ம் தேதி பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் 6மாதங்கள் மட்டுமே அவர் தலைமை நீதிபதி பதவி வகிப்பார்.
உச்சநீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார்.
உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்பு விழா குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. அவருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
உச்சநீதிமன்றத்தின் 50வது தலைமை நீதிபதியாக கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் 9ம் தேதி முதல் பதவி வகித்து வந்த டி.ஒய் சந்திரசூட் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் ஓய்வுப்பெற்றார். முன்னதாக டி.ஒய் சந்திரசூட்டின் பரிந்துரையை ஏற்று மூத்த நீதிபதி சஞ்சீவ் கன்னாவின் நியமனத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தார்.இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் 51-வது புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா இன்று பதவியேற்றார். சஞ்சீவ் கன்னாவுக்கு அடுத்த ஆண்டு மே 13ம் தேதி பதவிக்காலம் நிறைவடைய உள்ள நிலையில் 6 மாதங்கள் மட்டுமே அவர் தலைமை நீதிபதி பதவி வகிப்பார்.
சஞ்சீவ் கன்னா குறித்து வாழ்க்கை குறிப்பை பார்ப்போம். சஞ்சீவ் கன்னா 1960-ம் ஆண்டு மே.14ம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்தில் சட்டப்படிப்பை முடித்தார். 2005ல் ஆண்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர் 2006-ல் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கடந்த 2019-ம் ஆண்டு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.மேலும் தேர்தல்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த தடை விதிக்க மறுப்பு, அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் தேர்தல் நிதிப் பத்திரத் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்ப்புகளை அளித்துள்ளார்.
What's Your Reaction?