வட்டார செய்திகளுக்கு புதிய ஹைபர் லோக்கல் செயலி.. அறிமுகம் செய்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்..
உலக அளவில் மக்களை இணைக்கும் சமூக வலைதளங்கள் வளர்ந்து வரும் நிலையில், உள்ளூர் வட்டாரங்களை இணைக்கும் ஹைபர் லோக்கல் செயலிகள் அதிகளவில் உருவாக்கப்பட்டு வருகின்றன.
சென்னையை மையமாகக் கொண்டு உள்ளூர் செய்திகள் மற்றும் நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளும் வகையில் கின் ஹைபர் லோக்கல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. Kynhood technologies நிறுவனம் உருவாக்கியுள்ள இந்தச் செயலியை தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார்.
இந்த அறிமுக விழாவில், பிரபல டென்னிஸ் வீரர் விஜய் அமிர்தராஜ், விஞ்ஞானியும், பத்மபூஷண் விருதாளருமான நம்பி நாராயணன், நடிகர்கள் மாதவன், சித்தார்த் மற்றும் சமூக வலைதள பிரபலங்கள் உட்பட பலர் முக்கிய விருந்தினர்களாக கலந்து கொண்டனர். இந்தச் செயலி மூலம் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
What's Your Reaction?