தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்... திமுக நிர்வாகி கைது !!

தனியார் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில்குமார் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கலைச்செல்வனை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Mar 1, 2024 - 11:06
தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மீது தாக்குதல்... திமுக நிர்வாகி கைது !!

சமீபத்தில் டெல்லியில் ரூ.2,000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் வழக்கில் சிக்கிய விவகாரத்தில் திமுக நிர்வாகியாக இருந்த ஜாபர்சாதிக் குற்றம்சாட்டப்பட்டார். இதன் தொடர்ச்சியாக சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள திமுக மாவட்ட செயலாளர் சிற்றரசுவின் அலுவலகக் கட்டிடத்திற்கு கீழ் உள்ள சகாரா எக்ஸ்பிரஸ் என்ற கொரியர் அலுவலகத்தில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு அதிகாரிகள் சோதனையிட்டனர். இதுதொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற தனியார் செய்திகள் தொலைக்காட்சியின் ஒளிப்பதிவாளர் செந்தில் குமாரை சிலர் கொடூரமாகத் தாக்கியதாகத் தெரிகிறது. 

தொடர்ந்து அவரது கேமராவை பிடுங்கிவைத்து, அதில் இருந்த அனைத்தையும் அழிக்குமாறு மிரட்டியதாகவும் தெரிகிறது. இதையடுத்து நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் தன்னை தாக்கியதாக திமுக மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் கலைச்செல்வன் மற்றும் சிலர் மீது புகார் கொடுத்தார். தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படாததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு கலைச்செல்வன் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருவதாக நுங்கம்பாக்கம் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow