விபத்தில் காயமடைந்த நபர்... அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் செயல்...!!

சென்னை அண்ணா சாலையில் விபத்தில் காயமடைந்த நபரை அவ்வழியாக சென்ற அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மீட்டு, முதலுதவி அளித்தார்.

Mar 1, 2024 - 11:45
விபத்தில் காயமடைந்த நபர்... அமைச்சர் டி.ஆர்.பி.ராஜாவின் செயல்...!!

எப்போதும் பரப்பரப்பாக காணப்படும் சென்னையில், வாரநாட்களில் குறிப்பாக காலை அலுவலகம் செல்லும் நேரத்தில், சாலை எங்கும் வாகனங்கள் கூட்டம் அலைமோதும். குறிப்பாக அண்ணா சாலையில் பல நிறுவனங்கள், அலுவலகங்கள் இருப்பதால், காலை 9 மணி முதல் 1 1 மணி வரை மிகவும் கூட்ட நெரிசலாக இருக்கும். அப்படி சென்னை அண்ணா சாலையில், இன்று(01.03.2024)காலை வழக்கம் போல் வாகன ஓட்டிகள் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது அண்ணாசாலை பழைய ஆனந்த் தியேட்டர் எதிரே, இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் திடீரென விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தார். அப்போது அவ்வழியாக சென்று கொண்டிருந்த தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா காரை விட்டு இறங்கி, அடிப்பட்ட நபரை மீட்டு, அவருக்கு முதலுதவி அளித்து பின்னர் ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow