"வடசென்னை வஞ்சிக்கப்பட்டு வளராமல் இருக்கிறது...பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வேதனை

கடந்த காலங்களில் எம்.பியாக தேர்வு செய்யப்பட்டவர்கள் மக்கள் பிரதிநிதியாக செயல்படாததால் தான் வடசென்னை வளராமல் இருக்கிறது என பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.

Apr 14, 2024 - 14:01
"வடசென்னை வஞ்சிக்கப்பட்டு வளராமல் இருக்கிறது...பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் வேதனை

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி நெருங்கியுள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் வடசென்னை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் பால் கனகராஜ், ஆர்.கே.நகர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மலர்கள் தூவியும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.

 

இதையடுத்து பாஜக வேட்பாளர் பால் கனகராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், இதற்கு முன்பு தேர்வு செய்யப்பட்டவர்கள் மக்கள் பிரதிநிதியாக செயல்படாததால் தான் வடசென்னை வளராமல் வஞ்சிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். வடசென்னை தொகுதியை வளர்ச்சிமிகு தொகுதியாக மாற்ற தனக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

 

 

தொடர்ந்து பேசிய பால் கனகராஜ், வடசென்னை தொகுதியின் பிரச்னை குறித்து பிரதமர் மோடியிடம் கூறியுள்ளேன் எனவும், எதற்காக தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை விளக்கிக் கூறி வாக்கு கேட்டு வருகிறோம் எனவும் தெரிவித்தார். மேலும், வடசென்னை தொகுதியில் பிரசாரத்திற்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் நல்ல வரவேற்பு கொடுப்பதாகவும் பால் கனகராஜ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow