பிரதமர் மோடி 3.0 அரசின் 15 நாட்களில் 10 சம்பவங்கள்... பட்டியலிட்டு விளாசிய ராகுல் காந்தி!

'மனரீதியாக பின்னடவை சந்தித்த மோடி தனது ஆட்சியை பாதுகாப்பதில் பிசியாக உள்ளார். ஆனால் வலிமையான எதிர்க்கட்சியாக அமைந்துள்ள இந்தியா கூட்டணி மக்களின் குரல்களை தொடர்ந்து எழுப்பி மோடிக்கு அழுத்தம் கொடுக்கும்.'

Jun 24, 2024 - 19:17
பிரதமர் மோடி 3.0 அரசின் 15 நாட்களில் 10 சம்பவங்கள்... பட்டியலிட்டு விளாசிய ராகுல் காந்தி!
மோடி, மோடி 3.0 அரசு

டெல்லி: பிரதமர் மோடி 3வது முறையாக பதவியேற்ற நிலையில், மோடி அரசின் முதல் 15 நாட்களில் நடந்த 10 சம்பவங்களை பட்டியலிட்டு ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 294 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைத்துள்ளது. பிரதமர் மோடி 3வது முறையாக இந்தியாவின் பிரதமராக பதவியேற்றுள்ளார்.

பிரதமர் மோடி அரசு பதவியேற்று இன்று 15 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த 15 நாட்களில் நடந்த சம்பவங்களை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பட்டியலிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது:- 1. மேற்கு வங்கத்தில் நடந்த மிகப்பெரிய ரயில் விபத்து, 2.ஜம்மு-காஷ்மிரில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல், 3.மக்கள் முன்பதிவு செய்த பெட்டிகளில் கூட இடம்கிடைக்காமல் பயணிக்கும் அவல நிலை. 4.நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள், 5.முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு ரத்து, 6.யுஜிஜி நெட் தேர்வில் வினாத்தாள் கசிவு, 7.பால், பருப்பு வகைகள், கேஸ் விலை உயர்வு, சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு, 8.தீப்பிடித்து எரியும் காடுகள், 9.தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், 10.அரசு முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யாத்தால் கடும் வெயிலுக்கு பலர் உயிரிழப்பு.

மனரீதியாக பின்னடவை சந்தித்த மோடி தனது ஆட்சியை பாதுகாப்பதில் பிசியாக உள்ளார். ஆனால் வலிமையான எதிர்க்கட்சியாக அமைந்துள்ள இந்தியா கூட்டணி மக்களின் குரல்களை தொடர்ந்து எழுப்பி மோடிக்கு அழுத்தம் கொடுக்கும். எனவே பிரதமர் தனது பொறுப்பில் இருந்து தப்பித்து விட முடியாது’’ என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இதற்கிடையே 18வது மக்களவை இன்று காலை கூடியது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் எம்பிக்களாக பதவியேற்றுக் கொண்டார். முன்னதாக பிரதமர் மோடியும், அமித்ஷாவும் இந்திய அரசியலமைப்பு சட்ட்த்தை மதிக்கவில்லை எனக்கூறி, அரசியலமைப்பு புத்தகத்தை கையில் ஏந்தி ராகுல் காந்தி, சோனியா காந்தி, கனிமொழி உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow