விஜயதரணியால் பாஜக வளர்ச்சியடையும்! - அண்ணாமலை நம்பிக்கை...

Feb 24, 2024 - 15:34
Feb 24, 2024 - 17:52
விஜயதரணியால் பாஜக வளர்ச்சியடையும்! - அண்ணாமலை நம்பிக்கை...

விஜயதரணியின் வரவால் தமிழக பாஜக மேலும் வளர்ச்சியடையும் என அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய மகளிர் அணி செயலாளராகவும், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் கொறடாவாகவும் உள்ளவர் விஜயதரணி. அதேபோல், காங்கிரஸ் கட்சி சார்பில் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் தொடர்ந்து 3 முறை  வெற்றி பெற்று எம்.எல்.ஏ-வாகவும் உள்ளார்.

இவர் இன்று(24.02.2024) மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் தமிழக தேர்தல் பொறுப்பாளர் அரவிந்த் மேனம் மற்றும் இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி ஆகியோர் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.  


இதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடையே பேசிய அவர், சிறு வயது முதல் காங்கிரஸ் கட்சியில் இருந்த தனக்கு, உரிய மரியாதை அளிக்கப்படவில்லை என்றார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் கட்சியாகவும் உள்ளதாக கூறினார். 
தமிழகத்தில் அண்ணாமலை தலைமையின் கீழ் பாஜக வளர்ச்சியடைந்து வருவதாகவும், தானும் கட்சியில் இணைந்து வளர்சிக்கும்,  பலப்படுத்துவதற்கும் பணியாற்றுவேன் என்றும் தெரிவித்தார். இந்நிலையில், விஜயதரணி பாஜகவில் இணைந்தற்கு வரவேற்பு தெரிவித்து,  தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், விஜயதரணியின் வருகை கட்சியின் பலத்தை கூட்டி தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வரும் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க : 

https://kumudam.com/Will-Warner,-who-withdrew-due-to-injury-play-in-the-IPL

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow