ரோஹித் சர்மாவுக்கு ‘நோ’ சொன்ன ரசிகர்கள்! - மைதானத்தில் என்ன நடந்தது?

Feb 18, 2024 - 17:00
Feb 18, 2024 - 21:28
ரோஹித் சர்மாவுக்கு ‘நோ’ சொன்ன ரசிகர்கள்! - மைதானத்தில் என்ன நடந்தது?

இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை டிக்ளேர் செய்வதாக அறிவித்தபோது, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் வேண்டாம் என்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3ஆவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்தது. அதிகப்பட்சமாக ரோஹித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 319 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. பென் டக்கெட் மட்டும் 139 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் யாரும் அரைச்சதத்தை கூட எட்டவில்லை. இதனையடுத்து 126 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது இரண்டாவது இரட்டைச் சதத்தைப் பதிவு செய்தார். இதனால் இந்திய அணி 2ஆவது இன்னிங்ஸில் 430 ரன்கள் எடுத்தது. அவர் 214 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்வதாக இந்திய அணி அறிவித்தது. இதனால், இங்கிலாந்து அணிக்கு 556 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தபோது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் வேண்டாம் என்ற சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏனென்றால், அப்போது, தனது முதல் போட்டியில் களமிறங்கிய சர்ஃப்ராஸ் கான் 68 ரன்களுடன் களத்தில் இருந்தார். அவரது, சதத்தை காண்பதற்காகவும், இரட்டைச் சதம் அடித்த ஜெய்ஸ்வால் தொடர்ந்து அதிரடி காட்டியதாலும், ரசிகர்கள் வேண்டாம் என கோஷமிட்டனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow