பாரதிதாசன் பல்கலை: நுழைவுத்தேர்வு சர்வருக்குள் நுழையவே முடியல… நின்றுபோன தேர்வு! மாணவர்கள் தவிப்பு…

தேர்வெழுத முடியாமல் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் அவதி.

Mar 10, 2024 - 17:01
பாரதிதாசன் பல்கலை: நுழைவுத்தேர்வு சர்வருக்குள் நுழையவே முடியல… நின்றுபோன தேர்வு! மாணவர்கள் தவிப்பு…

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடந்த முனைவர் பட்டத்திற்கான நுழைவுத் தேர்வில், சர்வர் கோளாறு ஏற்பட்டதால் ஆன்லைனில் தேர்வு எழுத முடியாமல் மாணவர்கள் அவதி அடைந்தனர்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவர்களுக்கான நுழைவுத் தேர்வு இன்று (மார்ச் 10) நடைபெறவிருந்தது. ஆன்லைன் மூலம் நடக்கவிருந்த நுழைவுத் தேர்வில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்ததாக கூறப்படுகிறது. இந்த நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெறுவதன் அடிப்படையிலேயே, பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள 130-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் முனைவர் பட்டப் படிப்பைத் தொடங்க முடியும். 

ஆன்லைனில் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு, சர்வரில் நுழைந்ததன் பின் தேர்வு எழுதும்படி அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று காலை அறிவிக்கப்பட்ட வலைதளத்தில் பயணர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை மாணவர்கள் உள்ளிட்டபோது ஏற்கனவே லாகின் செய்திருப்பதாகக் காட்டியுள்ளது. இதனால் குறித்த நேரத்தில் தேர்வு தொடங்காத நிலையில், தேர்வெழுத முடியாமல் மாணவர்கள் அவதி அடைந்தனர். 

இதையடுத்து, தேர்வு எழுதுவதில் ஏற்பட்ட சிக்கல் குறித்து பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாளார் விசாரித்துள்ளர். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது பல்கலைக்கழக துணை வேந்தரிடம் கலந்தாலோசித்து அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார். ஏற்கனவே பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தேர்வெழுதிய மாணவர்களின் முடிவுகளில் குளறுபடி ஏற்பட்டு சர்ச்சையான நிலையிலும் நுழைவுத்தேர்விலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow