உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம்... மக்களைத் தேடிச் செல்லும் தவெக நிர்வாகிகள்!

அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்கள் தோறும் சென்று மக்களை நேரடியாக சந்தித்து உறுப்பினர்களாகச் சேர்க்க தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.

Mar 10, 2024 - 17:13
உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம்... மக்களைத் தேடிச் செல்லும் தவெக நிர்வாகிகள்!
கரூர் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் கூட்டம்

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. அரவக்குறிச்சி தொகுதி பொறுப்பாளர் சதீஷ்குமார் ஏற்பாட்டில், கரூர் மாவட்ட தவெக தலைவர் மதியழகன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, கட்சி பணிகள் தொடர்பாக பல்வேறு முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது.

கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட தலைவர் மதியழகன்,   ”இந்த கூட்டத்தில் கட்சியில் புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பதில் நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. மேலும், இணைய வழி உறுப்பினர் சேர்க்கையில் ஏற்பட்டுள்ள பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என்றார். அதேபோல், முதியவர்கள் மற்றும் செல்போன் வசதி இல்லாதவர்களை உறுப்பினர்களாகச் சேர்க்க, கிராமங்கள் தோறும் நிர்வாகிகள் நேரடியாகச் சென்று உறுப்பினர் சேர்க்கையில் தீவிரமாக ஈடுபட உள்ளனர்” எனத் தெரிவித்தார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow