தஞ்சையில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 2 பேரை மடக்கி பிடித்த போலீசார்
6 பவுன் தாலி செயினை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்து ஆஜர்படுத்தினர்.
தஞ்சையில் செயின் பறிப்பில் ஈடுப்பட்டு வந்த இரண்டு திருடர்களை தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.
தஞ்சாவூர் மாதாக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் அருணா.இவரது மனைவி வானதி 40.இவர் திருவையாறில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.கடந்த 3ந் தேதி வேலையை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தஞ்சை நோக்கி வந்து கொண்டிருந்தபோது பள்ளி அக்ரஹாரம் வெண்ணாற்றங்கரையில் என்ற இடத்தில் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் வானதி கழுத்தில் கிடந்த 9 பவுன் தாலி செயினை அறுத்துள்ளனர்.
சுதாரித்து கொண்ட வானதி செயினை ஒரு கையில் இருக்கமாக பிடித்து கொண்டதில் 3 பவுன் வானதி கையில் மாட்டி கொண்டது.6 பவுன் மட்டும் திருடர்கள் அறுத்து கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றுவிட்டனர்.
இது குறித்து வானதி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் உள்ள நூற்றுக்கு மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வந்தனர்.
திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளியை கண்டுபிடிக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆசிஷ் ராவத் உத்தரவின் படி,நகர காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் தென்னரசு தலைமையில்,தலைமை காவலர் கோதண்டபாணி, திருகுமரன், அருண்மொழிவர்மன், இஸ்மாயில்,விஜய்சந்திரன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுப்பட்டனர்.
அரியலூர்,பெரம்பலூர்,திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் திருடர்களை தேடி வந்த நிலையில் நேற்று திருவையாறு கல்யாணபுரத்தை சேர்ந்த சூரியா (எ) சூரியா 24,யோகேஸ்வரன் 18,ஆகிய இரண்டு பேரை தனிப்படை போலீசார் கல்யான புரத்தில் மடக்கி பிடித்து அவர்களிடம் இருந்த 6பவுன் தாலி செயினை மீட்டு நீதிமன்றத்தில் ஒப்படைத்து ஆஜர்படுத்தினர்.பின் இருவரையும் தஞ்சாவூர் கிளை சிறையில் அடைத்தனர்.
What's Your Reaction?