"தலைநகர் டெல்லியில் குண்டு வெடிக்கும்" இ-மெயிலில் வந்த மிரட்டலால் பரபரப்பு...

டெல்லியில் உள்ள பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

May 1, 2024 - 21:12
"தலைநகர் டெல்லியில் குண்டு வெடிக்கும்"  இ-மெயிலில் வந்த மிரட்டலால் பரபரப்பு...

தலைநகர் டெல்லியில் மூன்று பள்ளிகளில் அடுத்தடுத்து குண்டு வெடிக்கும் என வந்த மிரட்டலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டெல்லியில் துவாரகா, நொய்டா உள்ளிட்ட இடங்களில் செயல்படும் துவாரகா பப்ளிக் பள்ளி, டெல்லி பப்ளிக் பள்ளி, மதர் மேரிஸ் ஆகிய பள்ளிகளுக்கு இ-மெயில் வந்துள்ளது. அதில் தங்கள் பள்ளி வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சற்று நேரத்தில் பள்ளி தரைமட்டமாகிவிடும் என மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது.

இதுதொடர்பாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதுடன், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, பள்ளிக்கு வந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.

இதையடுத்து, பள்ளிகளில் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், பள்ளிகளுக்கு அண்மையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அதே இ-மெயில் ஐடி மூலமே மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow