"ஐ.நாவின் கருத்தெல்லாம் எனக்கு தேவையில்லை" கெஜ்ரிவால் விவகாரம் - பாய்ந்த ஜெய்சங்கர்..
இந்தியாவில் தேர்தல்கள் நியாயமாக நடக்க வேண்டுமென ஐ.நா என்னிடம் கூறத்தேவையில்லை என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் மார்ச் 21ம் தேதி டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்தது. இதுதொடர்பாக ஐ.நா பொதுசெயலாளர் ஆண்டனியோ குட்டரெசின் செய்தித்தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் பேசியபோது, இந்தியாவின் அரசியல் சிவில் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமென அவர் கூறினார். சுதந்திரமான - நியாயமான தேர்தல் இந்தியாவில் நடக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், எங்கள் தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடக்க வேண்டுமென ஐ.நா என்னிடம் கூறத் தேவையில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்துள்ளார். தேர்தல்கள் நியாயமாக நடைபெறுவதை மக்கள் உறுதிசெய்வர் எனவும் இதுதொடர்பாக கவலைப்படத் தேவையில்லை எனவும் அவர் கூறினார்.
What's Your Reaction?