பிரிட்டன் இளவரசிக்கு புற்றுநோய் பாதிப்பு...கீமோதெரபி எடுத்துடு வரேன்...வீடியோ வெளியிட்டு உருக்கம்...
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் கீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக பிரிட்டன் இளவரசி கேத் மிடில்டன் தெரிவித்துள்ளார்.
பிரிட்டன் அரச குடும்பத்தை சேர்ந்த வேல்ஸ் இளவரசர் வில்லியமுக்கும், கேத் மிடில்டனுக்கும் கடந்த 2011 ஆண்டு லண்டனில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது. 3 குழந்தைகளுடன் அவர்கள் அரண்மனையில் வசித்து வரும் நிலையில் பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவரது அரச பணிகளை இளவரசர் வில்லியமஸ் கவனித்து வருகிறார்.
இதனிடையே இளவரசி கேத் மிடில்டனை காணவில்லை என்று செய்திகள் வெளியான நிலையில் கடந்த ஜனவரியில் அவருக்கு வயிற்று வலி காரணமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியானது. மேலும் அறுவை சிகிச்சையின் மூலம் அவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து இரண்டு வார காலம் அவர் மருத்துவ சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் தனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறி கேத் மிடில்டன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
அதில், தனக்கு புற்றுநோய்க்கான கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவக் குழு அறுவுத்தியது. தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சை பெற்று வருகிறேன். இருந்தாலும் நலமுடன் இருக்கிறேன். இதில் இருந்து மீண்டு வர உதவும் விஷயங்களில் தான் கவனம் செலுத்தி வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?