தஞ்சை பா.ஜ.கவினரிடையே  பதவி சண்டை: நிர்வாகிக்கு சண்டை உடைப்பு-போலீசில் புகார்

செல்போனை  ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு  தலைமறைவாகியுள்ள கவிதாவை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை  எஸ்.பி  ஆஷிஸ் ராவத்திடம் புகார் அளித்துள்ளதுள்ளோம்

தஞ்சை பா.ஜ.கவினரிடையே  பதவி சண்டை: நிர்வாகிக்கு சண்டை உடைப்பு-போலீசில் புகார்

பதவி சண்டையில் தஞ்சை  மாவட்ட பா.ஜ.க மகளிர் அணியின் செயலாளரை வீடுபுகுந்து தாக்கியதாக மாவட்ட மகளிர் அணி தலைவி மீது எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை  மாவட்ட பா.ஜ.க மகளிர் அணியின் செயலாளராக இருப்பவர் ஜெகதீஸ்வரி. இவருக்கும்  தஞ்சை மாவட்ட மகளிர் அணியின் தலைவியாக இருந்த கவிதாவிற்கும்  அடிக்கடி பதவி அதிகார தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,பொங்கலன்று  கவிதா  இளைஞர்கள் சிலரோடு ஜெகதீஸ்வரியின் வீட்டுக்கு சென்று தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார். மேலும் ஜெகதீஸ்வரியின் தலையில் தாக்கி உள்ளார். இதில் ஜெகதீஸ்வரி  ரத்தம் கொட்ட கொட்ட  தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு  அனுமதிக்கப்பட்டு  10 தையல் போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட  ஜெகதீஸ்வரி கூறுகையில்,  நான் பி.எச்டி வரை படித்துள்ளதால் கட்சியில்  நிர்வாகிகள் மதிப்பார்கள். அதனை பொறுத்துக்கொள்ள முடியாத கவிதா அடிக்கடி என்னிடம் தகராறு செய்வார். பொங்கலன்று வீடு புகுத்து என்னை அடித்ததில்  மண்டையில் காயம் ஏற்பட்டு  10 தையல்போடும் நிலை ஏற்பட்டது.

செல்போனை  ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டு  தலைமறைவாகியுள்ள கவிதாவை கைது செய்து நடவடிக்கை எடுக்கக்கோரி தஞ்சை  எஸ்.பி  ஆஷிஸ் ராவத்திடம் புகார் அளித்துள்ளதுள்ளோம் என தெரிவித்தார். பதவி பிரச்னையில் தஞ்சை மாவட்ட பாஜக நிர்வாகிகள் தாக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுகுறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow