2024 IPL முதல் போட்டி இன்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது...

CSK RCB அணிகள் மோதும் 2024 IPL தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் இன்று இரவு தொடங்கவுள்ளது.

Mar 22, 2024 - 10:08
2024 IPL முதல் போட்டி இன்று இரவு சென்னை சேப்பாக்கத்தில் கோலாகலமாக தொடங்கவுள்ளது...

CSK RCB அணிகள் மோதும் 2024 IPL தொடரின் முதல் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் கோலாகல கலை நிகழ்ச்சிகளுடன் இன்று இரவு தொடங்கவுள்ளது.

IPL என்றாலே கோலாகலம் தான். 17 ஆவது IPL தொடர் இன்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்குவது இளைஞர்களுக்கு ஒரு விருந்தாக அமையவுள்ளது. சாதாரணமாகவே சென்னை சூப்பர் கிங்ஸ், தல தோனி என்றால் தமிழக இளைஞர்கள் கொண்டாடுவார்கள். இந்த முறை முதல் போட்டி இன்று இரவு 8 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தொடங்கவுள்ளது.

இந்த முறை நடப்பு சேம்பியனான CSK, புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (Ruturaj Gaikwad) தலைமையில் களம் காண்கிறது. இந்த நிலையில் இன்றிரவு தொடங்கும் முதல் போட்டியில் சென்னை அணி, பாப் டு பிளிஸ்சிஸ் (Faf du Plessis) தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. 

BCCI இந்த முறை சில புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. அதன்படி, நடப்பு IPL தொடரில் ஒரே ஓவரில் இரு பவுன்சர்கள் வீசுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஒரு பேட்ஸ்மேன் ஸ்டெம்பிங் ஆனாரா? இல்லையா? என்பதை மூன்றாவது நடுவர் முடிவு எடுக்கும்போது, முதலில் அவர் கேட்ச் ஆனாரா என சரிபார்த்து முடிவு எடுக்கப்படும். வொய்டு பால், நோ பால் போன்றவற்றிக்கு ஒரு இன்னிங்ஸில் ஒரு அணி 2 முறை ரெவியூ செய்யலாம். ICC அமல்படுத்தியுள்ள STOP CLOCK என்ற ஒரு ஓவர் முடிந்தவுடன் 60 வினாடிகளில் அடுத்த ஓவர் வீச வேண்டும் என்ற விதிமுறையை IPL தொடரில் BCCI அமல்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow