நெல்லை அமமுக நிர்வாகியைக் கொல்ல முயற்சி
ஆம்புலன்சை வரவழைத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
நெல்லை அமமுக நிர்வாகி மீதான கொலை முயற்சி குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நெல்லை டவுன் வயல் தெருவைச் சேர்ந்த தொழிலதிபர் முருகன். இவரது மகன் சக்தி(30).ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். அமுமுக கட்சியின் பகுதிச் செயலாளராகவும் பணியாற்றுகிறார்.
இவரது குழந்தைகள் டவுன் பாரதியார் தெருவில் உள்ள தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியில் படிக்கிறார்கள். எனவே சக்தி தினமும் மோட்டார் சைக்கிளில் குழந்தைகளை பள்யில் விட்டுவிட்டு மாலையில் கூட்டிச்செல்வது வழக்கம்.
கடந்த 21ம் தேதி காலையில் வழக்கம் போல் அவர் குழந்தைகளை பள்ளியில் விட்டு டவுன் ஆர்ச் வழியாய் தெற்கு மவுன்ட் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரில் மூன்று பேர் டூ வீலரில் வந்து அவரது பைக்கில் மோதினர். இதனால் நிலைகுலைந்து போன சக்தி மோட்டார் சைக்கிளோடு தரையில் சரிந்திருக்கிறார்.
உடனே அந்தக் கும்பல் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச்சென்றுள்ளனர். அந்த வழியாக வந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் சக்தியை கொல்ல முயன்றது யார்? என்ன காரணம் என்று சப்-இன்ஸ்பெக்டர் முருகனிடம் கேட்டோம். அவர் கூறுகையில், “டவுன் பகுதியில் வசிப்பவர் ரவுடி ஆனந்த். இவருக்கும் சக்திக்கும் நிலப்பிரச்சினை இருந்து வருகிறது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சக்தியின் அப்பா முருகனை ரவுடி கும்பல் கையில் வெட்டியது. தற்போது சக்தியையும் தீர்த்துக் கட்ட முயற்சித்திருக்கிறது. ஆள் நடமாட்டம் அதிகமிருந்ததால் அவர் பிழைத்துக் கொண்டிருக்கிறார். ரவுடி ஆனந்தின் இருப்பிடம் தெரிய வந்திருக்கிறது. விரைவில் அவர் கைது செய்யப்படுவார்” என்றார்.
What's Your Reaction?