ராசாபேட்டை கடற்கரையில் உயிரிழந்து கரை ஒதுங்கிய டால்பின்
டால்பின் சுமார் 5 அடி அளவுக்கு இருந்தது.
ராசாபேட்டை கடற்கரையில் உயிரிழந்த நிலையில் டால்பின் ஒன்று கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
கடலூர் மாவட்டத்தில் சிங்காரத்தோப்பு. தேவனாம்பட்டினம் தாழங்குடா, ராசாப்பேட்டை, அன்னங்கோயில்,குமாரப்பேட்டை உள்ளிட்ட 54 மீனவ கிராமங்கள் உள்ளன. இங்கு இருந்து தினந்தோறும் ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.
இந்நிலையில், ராசாப்பேட்டை கடற்கரை ஓரத்தில் டால்பின் ஒன்று மயங்கிய நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. மேலும் அதன் மீது பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் வலைகள் இருந்தது.
இதை பார்த்த அந்த பகுதி இளைஞர்கள் உடனடியாக அந்த டால்பினை மீட்டு அதன் மீது இருந்த பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் வலையை நீக்கி நேற்று இரவு மீண்டும் அதை தூக்கிக்கொண்டு கடலில் நீந்தி சென்று நடுக்கடலில் கொண்டு விட்டுள்ளனர். பின்னர் அங்கிருந்து சென்று விட்ட நிலையில், இன்று அதிகாலை அந்த டால்பின் மீன் ராசாப்பேட்டை கடற்கரை ஓரத்தில் உயிரிழந்து கரை ஒதுங்கி கிடந்தது. இந்த டால்பின் சுமார் 5 அடி அளவுக்கு இருந்தது. இதனை அப்பகுதி மீனவர்கள் சோகத்துடன் பார்த்து சென்றனர்.
What's Your Reaction?