சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மீண்டும் போலீசார் சோதனை 

தமிழ்த்துறை பேராசிரியர் அலுவலகம், கணினி அறிவியல் துறை பேராசிரியர் அலுவலகம் உள்ளிட்ட ஆறு அலுவலகங்களில் போலீசார் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

Jan 11, 2024 - 11:23
Jan 11, 2024 - 18:39
சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மீண்டும் போலீசார் சோதனை 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் மீண்டும் போலீசார் சோதனை செய்து வருகின்றனர்.

சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெகநாதன் வர்த்தக ரீதியாக நிறுவனம் தொடங்கியதாக அவர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் தொடர்புடைய இடங்களில் ஏற்கனவே போலீசார் சோதனை நடத்தி இருந்தனர்.

தற்போது பல்கலைக்கழக வளாகத்தில் தமிழ்த்துறை பேராசிரியர் அலுவலகம், கணினி அறிவியல் துறை பேராசிரியர் அலுவலகம் உள்ளிட்ட ஆறு அலுவலகங்களில் போலீசார் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.

இன்று பிற்பகல் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ள அலுவலர்கள் கூட்டத்தில் தமிழ்நாடு ஆளுநர்ஆர்.என்.ரவி பங்கேற்க உள்ள நிலையில் போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டு வருவது பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow