மீண்டும் தலையெடுக்கும் சாதிவெறித் தாக்குதல்கள்! தென்மாவட்டங்களை கலவர பூமியாக்க சதித்திட்டமா?

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு மாத இடை வெளியில் சாதிவெறி பிடித்த இளைஞர்களால் ஒரு சமுதாயம் குறிவைத்து தாக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சமூக குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டிய போலீஸ், சாதாரணமாக கைதுசெய்து ஜெயிலுக்கு அனுப்பியிருக்கிறது. அதிரடி நடவடிக்கை இல்லாவிட்டால் இதுபோன்ற சம்பலங்கள் அடிக்கடி அரங்கேறும் என்று அச்சமூட்டுகிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

மீண்டும் தலையெடுக்கும் சாதிவெறித் தாக்குதல்கள்! தென்மாவட்டங்களை கலவர பூமியாக்க சதித்திட்டமா?
ரிப்போட்டர்

சம்பவம் ஒன்று...

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள பெரும்பத்து கிராமத்திற்கு கடந்த மாதம் மூன்று மோட்டார் சைக்கிள்களில் முகமூடி அணிந்த ஏழு பேர் வந்துள்ளனர். அங்கு டீக்கடையில் பேசிக்கொண்டிருந்தவர்கள் மீது அவர்கள் திடீரென வெடிகுண்டுகளை வீசியுள்ளனர்.பயத்தில் பதறி ஓடியவர்களை விரட்டி விரட்டி வெட்டியுள்ளனர். இதில் பேர் படுகாயம் அடைந்தனர். வெட்டியவர்கள் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சம்பவம் இரண்டு...

மேற்கண்ட சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சம்பவம் அரங்கேறி முழுமையாக குணமடையாத நிலையில், தென்காசி மாவட்டத்திலும் அதேபோன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. ஆலங்குலம் அருகே இருக்கும் நெட்டூர் கிராமத்தில் கடந்த மே 29ம் தேதி ஒரு திருமண நிகழ்ச்சியும் கலவரத்தால் கதிகலங்கி தேவேந்திரகுல வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு திருமண நிகழ்ச்சியும் கலவரத்தால் கதிகலங்கி போய்விட்டது. மோட்டார் சைக்கிளில் வந்த எட்டு பேர் திருமண வீட்டில் இருந்தவர்களை சாமாரியாக வெட்டிச் சாய்த்துவிட்டு தப்பினர்.

இந்த தாக்குகளில் எட்டு பேர் படுகாயமடைந்தனர். குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்த போலீஸ் ஐயப்பன் என்கிற ரவுடியை மட்டும் சுட்டுப் பிடித்தனர். இவர்களை சிறையில் அடைத்தாலும் ஒரு சில மாதங்களில் வெளியே வந்துவிடுகிறார்கள். எனவே கடுமையான தண்டனை தான் இதற்கு நிரந்தரத் தீர்வாக இருக்கும் என பொதுமக்களே இப்போது பேசத் தொடங்கியுள்ளனர். இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் காந்திமதிநாதனிடம் கேட்டோம். இன்றைக்கு கொலை செய்பவன். அடுத்தவன் சொத்தை திருடுபவன் எல்லாம் சாதி சங்கத்தில் தலைவராகிவிடுகிறார்கள் சிலர் கட்சியே தொடங்கி விடுகின்றனர். ஜெயிலில் வைத்து நாலு புத்தகத்தை படித்துவிட்டால் அவர்களை அம்பேத்கர் ரேஞ்சுக்கு தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள்.

இந்த அவலம் அனைத்து சமுதாய இளைஞர்கள் மத்தியிலும் புரையோடிப் போய்விட்டது. அப்படிப்பட்ட ரவுடிகளை நாடிவரும் இளைஞர்களை அவர்கள் மூளைச்சலவை செய்து சாதிவெறியை தூண்டி விடுகின்றனர் அப்படி தூண்டப்படுகிற இளைஞர்கள்தான் கொலை சம்பவங்களில் ஈடுபடுகின்றனர். எத்தனை பேரை வெட்டினாலும் சிறைக்குச் சென்றுவிட்டு சில நாட்களில் வெளியே வந்துவிடலாம் மனப்போக்கு இளைஞர்கள் மத்தியில் அதிகரித்துவிட்டது. அதன் வெளிப்பாடுதான் பெரும்பத்து, நெட்டூர் கிராம வன்முறைகள்.

பெரும்பத்தில் நடந்த சம்பவத்தில் இரண்டு பேர் கொலை செய்யப்பட்டனர். எட்டு பேர் காயமடைந்தனர் அனைவருமே அப்பாவிகள் கொல்லப்பட்டவர்களில் ஒருவர் ஊனமுற்றவர். அப்போதே குற்றவாளிகள் சிலரை சுட்டுத்தள்ளி இருந்தால் நெட்டூரில் இந்த சம்பவம் நடந்திருக்காது. இனிமேலும் சாதிய வெறியோடு அருவாளை தூக்கும் யாரையும் விடக்கூடாது 16 முதல் 20 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள்தான் இதுபோன்ற சம்பவங்களில் அதிகம் ஈடுபடுகிறார்கள். போலீஸாரின் தோட்டாக்கள் இனி பேச வேண்டும்

அமைதியை நிலைநாட்டுமா-

19961ம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் கொடியன்குளம் கிராமத்தை மையமாக வைத்து கலவரம் நடந்தது.தேவர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயம் மோதிக்கொண்டன சொத்துகளும் நாசமானது  அந்த கலவரம் குறித்து விசாரித்த கோமதிநாயகம் கமிட்டி  தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சி ஏற்படுத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகம் வேண்டும். நெல்லை தூத்துக்குடி தென்காசி மாவட்டங்களில் மெஜாரிட்டியாக இருக்கும் காடார்தேவர் தேவேந்திரகுல வேளாளர் சமுதாயங்களைச் சேர்ந்தவர்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.எஸ்.பி. எஸ்பி மற்றும் ஆகிய பணிகளில் நியமனம் செய்யக் கூடாது என்று பரிந்துரை செய்தது. ஆனால் அதை இரண்டு கழக அரசுகளுமே கண்டுகொள்ளவில்லை. இந்த மாவட்டங்களில் மெஜாரிட்டியாக இல்லாத கவுண்டர், வன்னியர். நாயர், முத்தரையர் உள்ளிட்ட சமுதாயங்களைச் சேர்ந்த அதிகாரிகளை இங்கு பணியில் நியமிக்க வேண்டும் அப்படி செய்தாய் இதுபோன்ற அட்ராசிட்டிகள் ஒடுக்கப்படும்" என்றார். 

பெண் பணியாளர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் குழு உறுப்பினரான வழக்கறிஞர் சொர்ணலதாவிடம் கேட்டோம் "இன்றைய இளைஞர்கள் ரவுடித்தனம் செய்வதை ஹீரோயிசம் என்று நினைக்கிறார்கள் சினிமாவும் வலைதலங்களும் அவர்களுக்கு அப்படித்தான் சொல்லிக் கொடுக்கின்றன. பள்ளியில் படிக்கும் மாணவர்கள் ஹீரோயிசம் என்கிற பெயரில் பல தவறுகளை செய்கிறார்கள். அரிவாள், கத்தி கொண்டு வருகிறார்கள். அதற்கு தண்டனையாக அவர்களை பள்ளியில் இருந்து நீக்கினால் அந்த மாணவனுக்கு ஆதரவாக மாவட்ட நிர்வாகம் தலையிடுகிறது அந்த மாணவனை அதே வகுப்பில் சேர்த்து படிக்க வைக்க வற்புறுத்துகிறார்கள் கொடூர செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் வயதைக் காட்டி தப்பிக்கும்  சம்பவங்களும் நடக்கிறது இதையெல்லாம் சரி செய்யாத வரை இது போன்ற கொடூர குற்றங்கள் ந்துகொண்டே நான் இருக்கும்' என்றார்.
கலவரம் செய்வோருக்கு கருணை காட்டக் கூடாது!

எழுதியவர்- எஸ்.அண்ணாதுரை

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow