முதல்வர் சிறப்பு திட்ட முகாம் -அமைச்சர் காந்தி ஆய்வு
பொதுமக்கள் வழங்கிய 500க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும்
திருத்தணி நகராட்சியில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் அமைச்சர் காந்தி ஆய்வு செய்து பயனாளிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்களின் தேவைகள் பூர்த்தி செய்யும் வகையில் மக்களுடன் முதல்வர் சிறப்பு திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பிரபுசங்கர் தலைமையில் இன்று நடைபெற்றது. நகராட்சி துறை, வருவாய்த்துறை, காவல்துறை உட்பட பல்வேறு துறைகள் சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இதில் நகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை, பட்டா மாற்றம் அரசு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் கேட்டு மனுக்கள் வழங்கப்பட்டது.
முகாமில் கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர் காந்தி கலந்து கொண்டு முகாமை பார்வையிட்டு ஆய்வு செய்து விண்ணப்பித்தவர்களை தகுதியான நபர்களுக்கு வருவாய்துறை சார்பில் சான்றிதழ்கள் வழங்கினார்.
பொதுமக்கள் முகாமில் பங்கேற்று பொதுமக்கள் வழங்கிய 500க்கும் மேற்பட்ட மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு 30 நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன், நகர மன்ற தலைவர் சரஸ்வதி பூபதி உட்பட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?