அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட பேருந்து சேவை மீண்டும் தொடக்கம்
ஏழை எளியோர்களுக்கு புடவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்
அதிமுக ஆட்சி காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து சேவையை மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்கு திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் தொடங்கி வைத்தார்.
திருவள்ளுர் பேருந்து நிலையத்தில் இருந்து அத்திப்பட்டு கிராமத்தின் வழியாக கனக்கம்மாச்சத்திரம் வரை சென்றுக்கொண்டிருந்த பேருந்து சேவையானது கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் பேருந்து சேவையை நிறுத்தப்பட்டது.இந்த சேவை 10 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாமல் கடும் அவதி அடைந்த மக்கள் மீண்டும் பேருந்து சேவையை இயக்கிட வேண்டும் என கிராம பொதுமக்கள் திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினரிடத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவை பெற்றுக்கொண்ட சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் உடனடியாக பேருந்து சேவையை தொடங்கிட வேண்டும் என துறை சார்ந்த அதிகாரிகளிடத்தில் ஆணையிட்டார்.
அதனைத்தொடர்ந்து அத்திப்பட்டு கிராமத்தில் இருந்து திருவள்ளூர் வரை செல்லக்கூடிய பேருந்து சேவையை சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் கொடி அசைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து பொதுமக்களுடன் பேருந்தில் பயணம் மேற்கொண்டார்.அதனை தொடர்ந்து அத்திப்பட்டு சிவா ஏற்பாட்டில் ஏழை எளியோர்களுக்கு புடவைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளையும் சட்டமன்ற உறுப்பினர் வழங்கினார்.இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் மகாலிங்கம் உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.
What's Your Reaction?