நீங்கள் நலமா திட்டம்: விளக்கம் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் “நீங்கள் நலமா” திட்டத்தை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Mar 6, 2024 - 14:05
Mar 6, 2024 - 15:33
நீங்கள் நலமா திட்டம்: விளக்கம் கொடுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் “நீங்கள் நலமா” திட்டத்தை தொடங்கி வைத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, நாள்தோறும் பார்த்துப் பார்த்து எத்தனையோ திட்டங்களைத் தொடங்கியுள்ளோம். அப்படி ஒரு திட்டம் தான் ”நீங்கள் நலமா” என்ற புதிய திட்டம். மக்கள் நல்வாழ்வுக்காக வகுக்கப்படும் திட்டங்கள் பயன்கள் மக்களைச் சேர்கிறதா என்பதை உறுதி செய்யவே நீங்கள் நலமா திட்டம்.

மக்கள் வாழ்வை மேம்படுத்த இதற்கு முன்பு தொடங்கிவைத்த திட்டங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். அந்தத் திட்டங்கள் அனைத்தும் ஒவ்வொரு குடும்பத்தையும், ஒவ்வொரு தனிமனிதரையும் மேம்படுத்தும் திட்டங்கள்.

அறிவிக்கப்பட்ட திட்டங்களால் தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் நிறைவேற்றி வெற்றி கண்டுள்ளது திராவிட மாடல் அரசு. நீங்கள் நலமா திட்டத்தை செயல்படுத்த வலைதளம் ஒன்றை தொடங்கி சில பயனாளிகளிடம் உரையாடி கருத்துகளைக் கேட்டு மகிழ்ந்தேன். தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைதளத்தில் பதிவேற்றப்படும். ஒவ்வொரு திட்டத்தின் நோக்கமும் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பது தான் முக்கியம். 

ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டுக்கு வர வேண்டிய நிதி உதவிகள் படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு வந்த பிரதமர் மோடி மாநில அரசுக்குத் தராமல மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய் சொன்னார். இரண்டு பேரிடர்களைச் சந்தித்த எட்டு மாவட்டங்களுக்கு எந்தவித நிதியும் மத்திய அரசு கொடுக்கவில்லை. அதற்காக 3406.77 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கி, நிவாரணப் பணிகளைச் செய்து மக்களை காத்து வருவது திமுக அரசு என்று அறிக்கையில் கூறியுள்ளார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow