"உதவுதல் நம் கடமை"... ரமலான் நோன்பு திறப்பிற்காக இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்..! 

கொளத்தூர் தொகுதியில் உள்ள 2,000 இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது

Mar 12, 2024 - 13:57
"உதவுதல் நம் கடமை"... ரமலான் நோன்பு திறப்பிற்காக இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர்..! 

உதவுதல் நம் முதல் கடமை’ என்ற பெயரில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 2,000 இஸ்லாமியர்களுக்கு ரமலான் நோன்பு திறப்பிற்காக அரிசி, ஆடைகள், பேரிச்சம்பழம், நிதிஉதவி அடங்கிய நலத்திட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 

தமிழ்நாட்டில் பிறை தெரிந்ததை அடுத்து, ரமலான் நோன்பு தொடங்கியதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இஸ்லாமியர்கள் இன்று சூரிய விடியலுக்கு முன் உணவருந்தியும், மசூதிக்குச் சென்று வழிபட்டும் நோன்பைத் தொடங்கினர். முன்னதாக தமிழக அரசு சார்பாக ரமலானுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, கொளத்தூர் தொகுதியில் உள்ள 2,000 இஸ்லாமியர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பிறருக்கு, நிர்வாகிகள் வழங்கினர். இந்நிகழ்வில், முதலமைச்சருடன் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் உடனிருந்தனர். 

இதில், பரிசுத்தொகுப்பை பெற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்ததுடன், மத்திய அரசு அமல்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்தை கடுமையாக எதிர்த்து வருவதற்கு நன்

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow