Vijay: விஜய்க்காக நள்ளிரவில் காத்திருந்த குட்டி ரசிகை… தளபதி கொடுத்த சர்ப்ரைஸ்… ட்ரெண்டாகும் போட்டோ

GOAT படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் சென்றுள்ள விஜய்க்கு கேரள ரசிகர்கள் உற்சாக வரவேற்புக் கொடுத்து வருகின்றனர்.

Mar 21, 2024 - 16:56
Vijay: விஜய்க்காக நள்ளிரவில் காத்திருந்த குட்டி ரசிகை… தளபதி கொடுத்த சர்ப்ரைஸ்… ட்ரெண்டாகும் போட்டோ

தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படப்பிடிப்புக்காக திருவனந்தபுரம் சென்றுள்ள விஜய்யை கேரள ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். கடந்த மூன்று தினங்களாகவே சமூக வலைத்தளங்கள் முழுவதும் விஜய் கேரளாவில் ரசிகர்களை சந்திக்கும் போட்டோஸ், வீடியோஸ் ஆகியவை ஆக்கிரமித்துள்ளன. மலையாள முன்னணி ஹீரோக்கள் மம்முட்டி, மோகன்லால், துல்கர் சல்மான், பிருத்விராஜ், டொவினோ தாமஸ், ஃபஹத் பாசில் ஆகியோரை விடவும் விஜய்க்கு கேரளாவில் ரசிகர்களின் வெறித்தனம் எல்லை மீறிப் போகிறது.  

ஏர்போர்ட் முதல் ஷூட்டிங் ஸ்பாட் வரை விஜய்யை வரவேற்க திரண்டிருந்த ரசிகர்களை பார்த்து கோலிவுட்டும் மிரண்டே விட்டது. கோட் படப்பிடிப்பு இன்னும் சில நாட்கள் வரை கேரளாவில் தான் நடைபெறவுள்ளது. இதனால் விஜய்யை பார்ப்பதற்காக மல்லுவுட் ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். நேற்று ஷூட்டிங் ஸ்பாட்டில் கூடிய ரசிகர்களிடம் மலையாளத்தில் பேசி தக் லைஃப் கொடுத்தார் விஜய். இதன் தொடர்ச்சியாக தற்போது விஜய் செய்துள்ள இன்னொரு சம்பவமும் வைரலாகி வருகிறது.  

அதில், நள்ளிரவு 2 மணியளவில் வரும் விஜய்க்காக குட்டி ரசிகை ஒருவர் காத்திருக்கிறார். அவரை வாஞ்சையுடன் அரவணைதக் கொண்ட விஜய், அச்சிறுமியிடம் இருந்து முத்தமும் பெற்றுக்கொண்டார். விஜய்யை பார்க்க வேண்டும் என காத்திருந்த சிறுமி, இறுதியில் இப்படியொரு சர்ப்ரைஸ்ஸை எதிர்பார்க்காமல் சர்ப்ரைஸ் ஆகிவிட்டார். இந்த வீடியோஸ் டிவிட்டார் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow