ஒரே ஓவரில் 6 சிக்சர்கள்… ஆந்திர வீரர் சாதனை..!
உள்ளூர் கிரிக்கெட் தொடரான சிகே நாயுடு கோப்பை போட்டியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வீரர் வம்சி கிருஷ்ணா, ஒரே ஓவரில் ஆறு சிக்சர்கள் அடித்து சாதனை செய்துள்ளார்.
கிரிக்கெட் உலகில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடிப்பது என்பது புதிதல்ல. 1968-ல் மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் கேரி சோபர்ஸ் கவுண்டி போட்டியில் மால்கம் நாஷ் பந்துவீச்சில் 6 சிக்சர்கள் அடித்து சாதனை புரிந்தார்.
இதற்கு அடுத்தபடியாக, இந்திய ஆல்ரவுண்டர் ரவிசாஸ்திரி ரஞ்சி கோப்பை ஆட்டத்தில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து அசத்தினார். சர்வதேச கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சிறப்பை தென்னாப்பிரிக்காவின் கிப்ஸ் பெற்றார்.
இந்திய முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங், 2007 டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஸ்டூவர்ட் பிராடு பந்துவீச்சில் 6 சிக்சர்கள் விளாசினார்.
இந்த நிலையில், சிகே நாயுடு கோப்பையில் ஆந்திராவை சேர்ந்த வம்சி கிருஷ்ணா, கடப்பாவில் நடைபெற்ற ஆட்டத்தில் ரயில்வே அணியின் சுழற்பந்து வீச்சாளர் தமந்தீப் சிங் பந்துவீச்சில் 6 சிக்சர்கள் விளாசினார். 61 பந்துகளில் சதமடித்து அசத்தினார். வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்:
What's Your Reaction?