பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மனித உரிமை மீறல், சாப்பாடு போடுவது இல்லை : நடிகர் விஜய்சேதுபதி மீது போட்டியாளர் நந்தினி சரமாரி குற்றச்சாட்டு
நடிகர் விஜய்சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரை ஒரு போட்டியாளராகவே பார்ப்பதில்லை அவமதிப்பு செய்வதாக பிக்பாஸ் போட்டியாளர் நந்தினி குற்றம்சாட்டியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்று 4 நாட்களில் வெளியேறிய நந்தினி அந்த தொலைக்காட்சிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். அது குறித்து நந்தினி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நான் பிக்பாஸ் ஷோ மூலம் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். நான் பைத்தியகாரி என பட்டம் சுமத்தப்பட்டுள்ளேன். இதனால என்னுடைய பணி மற்றும் கேரியர் கேள்விக்குறியாகி உள்ளது. பிக்பாஸ் சோவில் ரியாலிட்டி என்பது சுத்தமாக இல்லை. மற்றவர்களை வெளியே அனுப்பாமல் என்னை வெளியே அனுப்புவதற்கு காரணம் என்ன?.
பிக்பாஸ் ஷோவில் மன உளைச்சல் ஏற்படுத்துகிறது மனித உரிமை மீறல் நடக்கிறது. பிக்பாஸ் ஷோவில் மனித உரிமை மீறல் இல்லாமல் நடத்த வேண்டும்.பிக்பாஸ் ஷோ 24*7 மணி நேரம்காட்டப்படவில்லை.அனைத்தையுமே கட் செய்து தான் வெளியிடுகிறார்கள்.
பிக்பாஸ் ஷோவில் ஒருதலைபட்ச அக்ரிமெண்ட் இருப்பதால் யாரும் பேச முன்வரவில்லை, ஆனால் நான் பேச முன் வருகிறேன்.பிக்பாஸ் ஷோவில் இருந்து தான் வெளியே வந்த பிறகு தனக்கு எந்தவித மெடிக்கல் உதவியும், பொருளாதாரதிற்கான ஏற்பாடும் செய்யவில்லை. பிக்பாஸ் ஷோவில் போட்டியாளர்களுக்கு சாப்பாடு போடாமல் மன உளைச்சலாக்குகிறார்கள்,
கம்ரூதின், பார்வதி ரெட்கார்டு வாங்குவதற்கு முன்னதாக தடுத்திருக்கலாம், பிக்பாஸ் ஷோவால் பார்வதி, கம்ரூதின் வாழ்க்கை வீணாகி உள்ளது. பார்வதி இல்லையென்றால் இந்த ஷோ இவ்வளவு தூரம் நடந்திருக்காது, பிக்பாஸில் தனக்கு நடந்த அந்நியாயத்திற்கு விளக்கம் கேட்டு வக்கீல் மூலமாக தனியார் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளேன்.
ஆனால் பதில் கடிதம் தனக்கு இதுவரை வரவில்லை. அடுத்தக்கட்டமாக நீதிமன்றத்தை நாட உள்ளேன். விஜய் சேதுபதி போட்டியாளரை ஒரு போட்டியாளராகவே பார்ப்பதில்லை எனவும் ஒரு விஷயத்தை சொல்ல வரும் போது அவமதிப்பு செய்கிறார். கமல்ஹாசன் இருந்த வரைக்கும் நல்லப்படியாக இருந்தது, விஜய்சேதுபதி வந்த பிறகு நல்லமுறையாக இல்லை" நந்தினி தெரிவித்துள்ளார்.
What's Your Reaction?

