போலீஸ் ஆனார் கிரிகெட் வீரர் முகமது சிராஜ் - தெலங்கானாவில் பதவி ஏற்றார்
இந்திய கிரிகெட் வீரரான முகமது சிராஜ் தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா மாநிலத்தில் காவல் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இந்திய கிரிகெட் அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராகத் திகழ்பவர் முகமது சிராஜ். இந்திய அணியின் வெற்றிக்கு பல நேரங்களில் தனது அபாரமான பந்து வீச்சின் மூலம் உறுதுணையாக இருந்தவர். ஹைதராபாத்தில் பிறந்த இவர் ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநராக மிகவும் பின் தங்கிய பொருளாதார சூழலில் இருந்தவர். தனது 19வது வயதிலேயே தெலங்கானாவில் கிளப் கிரிகெட் போட்டிகளில் விளையாடத் தொடங்கிய முகமது சிராஜ், பின்னர் தன் திறமை காரணமாக இந்திய அணியிலும், ஐபிஎஸ் போட்டியிலும் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முக்கியமான பந்து வீச்சாளராக சிராஜ் திகழ்கிறார். டி20 உலகப் போட்டிகளில் சிராஜ் தன் பங்களிப்பை சிறப்பாகச் செய்திருந்தார். இந்திய அணி கோப்பையைக் கைப்பற்றியதை அடுத்து அந்த அணியில் இடம்பெற்ற தெலங்கானா வீரரான முகமது சிராஜுக்கு முக்கியமான அரசுப்பதவி வழங்கப்படும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவித்திருந்தார். அதன்படி அவருக்கு துணைக் காவல் கண்காப்பாளர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது.
காவல்துறை தலைமை இயக்குநரிடம் துணைக் காவல் கண்காணிப்பாளராக இன்று அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றார். இது மட்டுமின்றி முகமது சிராஜுக்கு ஹைதராபாத் ஜூப்ளி ஹில்ஸில் 12 செண்ட் இடமும் வழங்கப்பட்டிருக்கிறது. திறமையால் மட்டுமே இந்த இடத்தை அடைந்திருக்கும் முகமது சிராஸுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
What's Your Reaction?