சாலை இல்லாததால் அரசு பள்ளி மாணவர்கள் சேற்றில் நடக்கும் அவலம்

சேற்றில் நடப்பதால் எங்களுக்கு சேற்றுப்புண் ஏற்பட்டு காய்ச்சல் போன்றவை வருகிறது.

Dec 1, 2023 - 16:25
Dec 1, 2023 - 19:13
சாலை  இல்லாததால் அரசு பள்ளி மாணவர்கள் சேற்றில் நடக்கும் அவலம்

சாலை வசதி இல்லாததால் சேற்று வயல்வெளியில் நடந்து செல்வதால் பல்வேறு இடையூறுகளை சந்திப்பதாக அரசு பள்ளி மாணவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே  உள்ளது சிறுகாலூர் கிராமம் உள்ளது.இந்த கிராமத்தில் 700க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களின் அன்றாட தேவைக்கான கிராம சாலை கடந்து அய்யனூர், அக்கராமங்கலம்,பண்ணப்பட்டு, எசனை, உள்ளிட்ட கிராமங்களை கடந்து சிதம்பரம் செல்கின்றனர்.

இந்த பகுதியில் பேருந்துகள் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே வருவதாக கூறி சிறுகாலூருக்கும் பின் பகுதியில் 2  கிலோமீட்டர் கடந்து பெருங்காலூர் செல்கின்றனர். மேலும் இவர்கள் 30 ஆண்டுகளுக்கு மேலாக அத்தியாவசிய தேவைக்காக பெருங்காலூர் பகுதிக்கு தான் சென்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது பருவமழை பெய்து வரும் காரணத்தால் பெருங்காலூர் ஊரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நடுநிலைப் பள்ளியில் பத்துக்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். சாலை வசதி இல்லாமல் சேற்றில் நடந்து செல்லும் அவலம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில், ”நாங்கள் விவரம் தெரிந்த முதல் பெருங்காலூரை கடந்துதான் சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் நகரங்களுக்கு சென்று தான் அத்தியாவசிய பொருட்கள் வாங்கி வருகிறோம்.நாங்கள் ஊரில் உள்ள அரசு பள்ளியில் கிராமத்தைச் சார்ந்த பத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகிறோம்.இந்த சேற்றில் நடப்பதால் எங்களுக்கு சேற்றுப்புண் ஏற்பட்டு காய்ச்சல் போன்றவை வருகிறது. இந்த சேற்றுச்சாலையில் நடந்துதான் எனக்கு இரண்டு வாரம் காய்ச்சல் அதிகரித்துள்ளது.இதனால் நான் பள்ளிக்கு செல்லாமல் லீவு எடுத்துக்கொண்டேன்.எங்களுக்கு முக்கிய சாலை இருந்தும் அந்த சாலையை அவசரத்திற்கு பயன்படுத்துவதில்லை. முழுக்க, முழுக்க நாங்கள் இந்த வயலின் உள்ள பாதையை தான் நம்பி இருக்கிறோம். எங்களுக்கு சாலை வசதி ஏற்படுத்தி தர மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow