நாதக நிர்வாகிகள் என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜர்..!
“நாம்தமிழர் கட்சி சார்பில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்"
என்.ஐஏ சோதனையைத் தொடர்ந்து சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் இன்று என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராகினர்.
கடந்த பிப்.2-ம் தேதி , தமிழகமெங்கும் தேசிய புலனாய்வு முகமையினர் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சென்னை, திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, கோவை, தென்காசி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் வீடுகளில் இந்த சோதனையானது நடைபெற்றது.
அதில் ஒரு பகுதியாக, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த Youtuber விஷ்ணு பிரதாப் என்பவரது வீட்டிலும் சோதனை நடைபெற்றுது. அவர் தனது யூடியூப் சேனலில் பிரபாகரன் குறித்த செய்திகளை தொடர்ந்து பதிவிட்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த 2022-ம் ஆண்டு பதியப்பட்ட ஒரு வழக்கின் அடிப்படையில் அந்த சோதனை நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
அந்த வழக்கின் பின்னனியானது:-
2022-ல் சேலம் மாவட்டத்தில் ஓமலூர் அருகே யூட்டியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்ததாக மூவரை கைது செய்து தமிழக க்யூப் பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அவர்களிடம் நடத்திய விசாரணையில், தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தை தமிழகத்தில் மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சி நடைபெற்று வருவது தெரியவந்தது.
இந்நிலையில் அதன் அடிப்படையிலே தற்போது நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீட்டில் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, நாம்தமிழர் கட்சி செய்தி தொடர்பாளர் சாட்டை துரைமுருகன், தென்காசியைச் சேர்ந்த இசைவாணன் மற்றும் கோவையைச் சேர்ந்த முருகன் ஆகியோருக்கு என்,ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராகும்படி தேசிய புலனாய்வு முகமை சம்மன் அனுப்பியிருந்த நிலையில், இன்று மூவரும் என்.ஐ.ஏ அலுவலகத்தில் ஆஜராகினர்.
இதுகுறித்து நாதக வழக்கறிஞர் சங்கர் கூறுகையில்:- நாம்தமிழர் கட்சி சார்பில் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும், எனினும், தேர்தல் நெருங்கும் வேளையில் கட்சியின் செயல்பாட்டை முடக்கும் நோக்கில் இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
இன்று மூவர் ஆஜராகி இருக்கும் நிலையில், மேலும் இருவர், (இடும்பவனம் கார்த்திக் மற்றும் தென்னகம் விஷ்னு) ஆகியோர் நாளை அஜராக என்.ஐ.ஏ சார்பில் மற்றொரு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | வரும் தேர்தலில் பாஜகவுடன் மீண்டும் கூட்டணி அமைக்கிறோமா?-ஜெயக்குமார் பேட்டி
What's Your Reaction?