IPL 2024 : "முதல் சில போட்டிகளில் டேவிட் வில்லி பங்கேற்க மாட்டார்" - LSG பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் பரபரப்பு தகவல்..!

cricket, david willey, ipl, confirms, lsg, coach, justin, langer, கிரிக்கெட், டேவிட் வில்லி, ஐபிஎல், உறுதிப்படுத்துகிறது, எல்எஸ்ஜி, பயிற்சியாளர், ஜஸ்டின், லாங்கர்

Mar 20, 2024 - 21:23
IPL 2024 : "முதல் சில போட்டிகளில் டேவிட் வில்லி பங்கேற்க மாட்டார்" -  LSG பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் பரபரப்பு தகவல்..!

நடப்பு IPL தொடருக்கான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியில் இடம்பிடித்திருந்த டேவிட் வில்லி முதல் சில போட்டிகளில் பங்கேற்க மாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டிங் லங்கர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் IPL தொடரின் 17ஆவது சீசன் நாளை மறுநாள் (மார்ச் 22) தொடங்கவுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் எந்த அணி கோப்பையை வென்று சாதனை படைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. 

முதல் போட்டியிலேயே ரசிகர்களை கவரும் வகையில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதேசமயம் கோப்பையை வெல்வதற்காக பிற அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. 

அந்த வகையில் கே.எல்.ராகுல் தலைமையில் களமிறங்கும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் தங்களது முதல் கோப்பையை வெல்லு முனைப்புடன் இத்தொடரை எதிர்நோக்கி காத்திருக்கிறது. இதற்காக அந்த அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. 

இந்நிலையில் நடப்பு சீசனுக்கான லக்னோ அணியில் இடம்பிடித்திருந்த வேகப்பந்துவீச்சாளர் டேவிட் வில்லி முதல் சில போட்டிகளில் கலந்து கொள்ளமாட்டார் என அந்த அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லங்கர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசிய அவர், "நடப்பு ஐபிஎல் சீசனிலிருந்து மார்க் வுட் விலகியுள்ளார். அதேசமயம் டேவிட் வில்லியும் முதல் சில போட்டிகளில் பங்கேற்பது சந்தேகம் தான். இதனால் தற்போதுள்ள லக்னோ அணி அனுபவமில்லாத பந்துவீச்சாளர்களை கொண்டுள்ளதாக பார்க்கப்படுகிறது. ஆனாலும் கடந்த சில நாட்களாக மீதமுள்ள வீரர்களின் செயல்பாடுகள் மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்களின் திறமை அபாரமானதாக இருக்கிறது. இதனால் எங்களுக்கு எந்த பின்னடைவும் ஏற்படாது" என்று தெரிவித்துள்ளார். 

நடப்பு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் மினி ஏலத்தில் டேவிட் வில்லியை அவரது அடிப்படை தொகையான ரூ.2 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow