சி.எஸ்.கேவுக்கு 2-வது வெற்றி ... 63 ரன்கள் வித்தியாசத்தில் சுருண்டது குஜராத்!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், குஜராத் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 2-வது முறையாக வாகை சூடியது.

Mar 27, 2024 - 01:01
சி.எஸ்.கேவுக்கு 2-வது வெற்றி ... 63 ரன்கள் வித்தியாசத்தில் சுருண்டது குஜராத்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், குஜராத் அணியை 63 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 2-வது முறையாக வாகை சூடியது.

17-வது ஐபிஎல் தொடரின் முதல் ஆட்டம், மார்ச் 22-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் தொடங்கியது. அந்தப் போட்டியில் பெங்களூரு அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி, தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது. அதன்பின் அடுத்தடுத்த போட்டிகள் நடைபெற்ற நிலையில், சிஎஸ்கேவின் 2-வது போட்டி, மீண்டும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று (மார்ச் 26) நடைபெற்றது. 

அதில், புதிய கேப்டன் ருதுராஜ் கெய்வாட் தலைமையிலான சென்னை அணி, சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைடன்ஸ் அணியை எதிர்கொண்டது.  டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ், பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்தது. பேட்டிங் செய்த சிஎஸ்கே, 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 206 ரன்களை குவித்தது. சிஎஸ்கே அணியின் ரவீந்திர ஜடேஜா 46 ரன்கள், கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 46 ரன்களும் எடுத்தனர். அதன்பின் களமிறங்கிய ஷிவம் துபே, 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து அசத்தினார்.

அதன்பின், 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணியின் வீரர்கள் ஆரம்பம் முதலே தடுமாறினர். இந்நிலையில், கடைசியில் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கட் இழப்புக்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்து, குஜராத் டைட்டன்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இந்த ஆட்டத்தில் 23 பந்துகளில் 51 ரன்கள் எடுத்த ஷிவம் துபே ஆட்ட நாயகன் விருதை வென்றார். இதற்கு அடுத்தபடியாக, ஐபிஎல் தொடரில் இன்று (மார்ச் 27) ஐதராபாத்தில் நடக்கவிருக்கும் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow