பதவியை ராஜினாமா செய்த வியட்நாம் அதிபர்... 2 ஆண்டுகளுக்குள் 2 அதிபர்கள் பதவி விலகல்.. என்ன காரணம்..?
துவாங் மீது ஏராளமான லஞ்ச புகார்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிடம் துவாங் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
வியட்நாம் நாட்டில் அதிபராக கடந்தாண்டு பதவியேற்றுக்கொண்ட வோ வான் துவாங், ஊழல் மற்றும் லஞ்சம் புகார் முன்வைக்கப்பட்ட நிலையில் தற்போது பதவி விலகியுள்ளார்.
வியட்நாம் நாட்டில் கடந்தாண்டு அதிபராக இருந்த குயென் சுவான் புக், கொரோனா பெருந்தொற்றின் போது நிலவிய ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு அரசியல் ரீதியாக பொறுப்பேற்று பதவி விலகினார். அதைதொடர்ந்து 54 வயதான வோ வான் துவாங் அதிபராக பொறுப்பேற்று ஓராண்டு மட்டுமே நிறைவு பெற்ற நிலையில், அவரும் தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார்.
முன்னதாக, துவாங் மீது ஏராளமான லஞ்ச புகார்கள், ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவிடம் துவாங் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். அதை அக்குழு பரிசீலித்ததை அடுத்து, அவர் பதவி விலகியதாக அறிவிக்கப்பட்டது.
இதேவேளையில் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
முன்னதாக பத்தாண்டுகளுக்கு முன், வியட்நாமின் குவாங் நகாய் மாகாணத்தின் முன்னாள் தலைவர் ஒருவர் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்ட பின், அவருக்கு மாற்றாக துவாங் தலைவராக அப்பகுதிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?