பாகிஸ்தான் துறைமுகத்தில் புகுந்த பயங்கரவாதிகள்... தொடர் துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பால் பரபரப்பு.. ராணுவம் குவிப்பு !

தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கம் தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றது

Mar 20, 2024 - 21:33
பாகிஸ்தான் துறைமுகத்தில் புகுந்த பயங்கரவாதிகள்... தொடர் துப்பாக்கிச்சூடு, குண்டுவெடிப்பால் பரபரப்பு.. ராணுவம் குவிப்பு !

பாகிஸ்தான் நாட்டிலுள்ள குவாதர் துறைமுக அதிகாரசபை வளாகத்தில் அடையாளம் தெரியாத பயங்கரவாதிகள் புகுந்து  குண்டுவெடிப்பு மற்றும் துப்பாகிச்சூடு சம்பவங்களை நிகழ்த்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதி முழுவதும் ராணுவம் மற்றும் போலீசார்  களமிறக்கப்பட்டுள்ளனர். அத்துடன் தொடர் எதிர்வினை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருவதாகவும், இதுவரையில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை எனவும் மக்ரான் மாகாண ஆணையர் சயீத் அகமது தெரிவித்துள்ளார். 

இதனிடையே, தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான  பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தின் மஜீத் படைப்பிரிவு இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ளது. முன்னதாக இந்த பயங்கரவாத இயக்கம் கடந்தாண்டு நவம்பர் மாதம்  2 வாகனங்கள் மீது நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 14 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

கடந்த மாதம் ஆராய்ச்சி மற்றும் பாதுகாப்பு ஆய்வுகளுக்கான மையம் வழங்கிய அறிக்கையின்படி, பிப்ரவரியில் குறிப்பாக தேர்தல் காலகட்டத்தில் மட்டும் 97 பயங்கரவாத தாக்குதல்களை பாகிஸ்தான் சந்தித்துள்ளதாகவும், இதில் 87 பேர் உயிரிழந்ததோடு 118 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow