திருவேற்காட்டில்  வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில்.அமைச்சர் எம்.ஆர்.கே. ஆய்வு

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்

Dec 7, 2023 - 15:32
Dec 8, 2023 - 14:48
திருவேற்காட்டில்  வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில்.அமைச்சர் எம்.ஆர்.கே. ஆய்வு

சென்னை அடுத்த திருவேற்காட்டில்  மழை வெள்ளம் சூழ்ந்த பகுதிகளை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு நிவாரண பொருட்களை வழங்கினார்.

சென்னையை அடுத்த திருவேற்காட்டில் பெரும்பாலான  பகுதி மிக்ஜாம் புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி பலத்த பாதிப்புக்குள்ளாகி உள்ளது.பத்தாயிரத்திற்கும்  மேற்பட்ட மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி கொண்டிருக்கும் நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை  தமிழக வேளாண்துறை அமைச்சர்  எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் பார்வையிட்டார்.

திருவேற்காட்டில் பல பகுதிகளில் இருந்து கூவம் ஆற்றில் மழை நீரை இணைக்கும் பணிகளை  அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் நாசர், திருவேற்காடு நகர் மன்ற தலைவர் மூர்த்தி ஆகியோர் மக்களிடம் குறைகளை கேட்டவாறே  ஆய்வு செய்தனர்.

200க்கும் மேற்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர் வழங்கினார்.ஆய்வின்போது, உடனடியாக மழை வெள்ளத்தை வெளியேற்றவும்,நோய் தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் அதிகாரிகளுக்கு அமைச்சர்  உத்தரவிட்டார்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow