திருநீலக்குடியில் 100 கிலோ புகையிலை குட்கா பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

கடைகளில் விற்பனை செய்வதற்காக எடுத்துவரப்பட்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Jan 5, 2024 - 15:22
திருநீலக்குடியில் 100 கிலோ புகையிலை குட்கா பொருட்கள் பறிமுதல்- 2 பேர் கைது

திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடியில் இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த 100 கிலோ  எடையுள்ள ஒரு லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்களை பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

தஞ்சை மாவட்டம்,திருவிடைமருதூர் அருகே திருநீலக்குடி காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட திருமலைராஜபுரம் நாட்டாறு பாலம் அருகே திருநீலக்குடி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் எடுத்து வந்த சுமார் 100 கிலோ எடையுள்ள ஒரு லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்களை திருநீலக்குடி  காவல் ஆய்வாளர் ராஜேஷ் தலைமையில் போலீசார் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட திருநீலக்குடி மெயின் ரோடு சீனிவாசன் (50) திருவலஞ்சுழி ஆர்ச் ரோடு செல்வம்(53)உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடைகளில் விற்பனை செய்வதற்காக எடுத்துவரப்பட்டு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow