நான் காதலிக்கும் பெண்ணை காதலிக்கிறாயா? துப்பாக்கி முனையில் மிரட்டல்... சென்னை மருத்துவ கல்லூரியில் பரபரப்பு

Apr 14, 2024 - 12:36
நான் காதலிக்கும் பெண்ணை காதலிக்கிறாயா? துப்பாக்கி முனையில் மிரட்டல்... சென்னை மருத்துவ கல்லூரியில் பரபரப்பு

சென்னை மருத்துவக்கல்லூரியில் தான் காதலிக்கும் பெண்ணை, இன்னொருவரும் காதலிப்பதை அறிந்து ஆத்திரத்தில் மாணவர் ஒருவர் சக மாணவரைத் துப்பாக்கி முனையில் மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னை மருத்துவக் கல்லூரியில் ரோகன் என்ற மாணவர் முதுநிலை பட்டப் படிப்பு படித்து வருகிறார். அவர் அதே கல்லூரியில் பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று இரவு டீக்கடையில் இவர் டீக்குடித்துக் கொண்டிருந்தபோது அதே கல்லூரியில் பிஎஸ்சி படிக்கும் டெல்லியைச் சேர்ந்த கஜராஜ் என்பவர் அங்கு வந்துள்ளார். அவரைப் பார்த்ததும் ஆத்திரமடைந்த ரோகன், சட்டென்று தான் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து கஜராஜை மிரட்டத் தொடங்கியுள்ளார். 

இதனால் அருகில் இருந்தவர்கள் பதறிப்போக, சற்று நேரம் அப்பகுதி மிகுந்த பரபரப்பானது. அதன் பின்னர், லாவகமாக அவரை மடக்கிப் பிடித்த ஆட்டோ ஓட்டுநர்கள் சிலர், அவர் கையிலிருந்து துப்பாக்கியையையும் பறித்து, அவரை அமைதியாக்கினர். அதன்பின் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ரோகனைப் பிடித்து, அவர் வைத்திருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். 

பின் ரோகனிடம் நடத்திய விசாரணையில், தான் காதலிக்கும் அதே பெண்ணைக் கஜராஜும் காதலிப்பதாகப் பேச்சு எழுந்தது. இதனால்தான் கஜராஜை மிரட்டும் நோக்குடன் துப்பாக்கி முனையில் அச்சுறுத்தல் விடுத்ததாக ரோகன் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அவரைக் கைது செய்த காவல்துறையினர், அவர் எங்கிருந்து துப்பாக்கியை வாங்கினார் என்று விசாரித்து வருகின்றனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow