பிரசாரத்திற்கு சென்ற இடத்தில் கேள்வி.. இளைஞரிடம் கோபப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

Apr 6, 2024 - 21:50
பிரசாரத்திற்கு சென்ற இடத்தில் கேள்வி.. இளைஞரிடம் கோபப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி

பிரசாரத்திற்கு சென்ற இடத்தில் வேலைவாய்ப்பு குறித்து கேள்வி கேட்ட இளைஞரிடம் கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி கோபப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தை நிறைவு செய்துவிட்டு காரில் புறப்பட தயாரான ஜோதிமணியிடம் அப்பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர், "நான் எம்.பி. ஆனால் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தருவேன் என்று சொன்ன வாக்குறுதி என்னவானது" என கேள்வி எழுப்பினார்.

இதனால் கோபமடைந்த ஜோதிமணி "வேலை எல்லாம் என எம்.பி. கொடுக்கிறது இல்லை" எனக் கூறிவிட்டு காரில் கிளம்ப முயற்சித்த அவர், மீண்டும் காரை விட்டு இறங்கி "இதற்கு எல்லாம் நான் காரணம் இல்லை. மத்திய அரசு தான் காரணம். இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமனரால் வேலைவாய்ப்பின்மை பிரச்னை தீர்த்து வைக்கப்படும்" என தெரிவித்தார்.

வேலைவாய்ப்பு குறித்து கேள்வி கேட்ட இளைஞரிடம் ஜோதிமணி கோபப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow