ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் குற்றவாளிக்கு இரட்டை ஆயுள்: திருவள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு
ஆரம்பாக்கம் சிறும் பாலியல் குற்றவாளி பிஸ்வகர்மாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து திருவள்ளூர் போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருவள்ளூர் அருகே பள்ளி முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்தபோது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஜூலை 12ந் தேதி நடைபெற்ற இந்த சம்பவத்தில் தொடர்புடைய நபர் யார் என்பதை கண்டறிய முடியாமல் காவல் துறை தொடக்கத்தில் திணறியது.
பின்னர் 20க்கும் மேற்பட்ட தனிப்படைகளை அமைத்து காவல் துறை தேடுதல் வேட்டை நடத்தியது. குறிப்பாக தமிழ்நாட்டை ஒட்டிய ஆந்திரா, கர்நாடக மாநில எல்லைகளில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த தேடுதல் வேட்டை ஒரு வழியாக வெற்றி பெற்றது. ரயில் நிலையம் ஒன்றில் சந்தேகத்தின்பேரில் நின்ற நபரை ஒரு தனிப்படை கைது செய்தது. மேலும் அந்த நபரை ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
இதற்கிடையே அந்த நபரை காட்டி, சிறுமியிடம் விசாரித்தனா். அப்போது அந்த சிறுமி, அந்த நபர் தான் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தார் என்று கூறினார். அவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ராஜு பிஸ்வகர்மா போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
அவரை திருவள்ளூர் மாவட்ட 'போக்சோ' சிறப்பு நீதிமன்ற நீதிபதி உமா மகேஸ்வரி முன், அவர் ஆஜர்படுத்தப்பட்டார். புழல்சிறையில் அடைக்கப்பட்டார். 5 மாதங்கள் நடைபெற்ற இந்த விழாவில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பிஸ்வகர்மாவிற்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 2 லட்சம் அபாரதம் விதித்து திருவள்ளூர் மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
What's Your Reaction?

