குழந்தை மீது சுடுதண்ணீர் ஊற்றிய போதை ஆசாமி கைது..!

Feb 7, 2024 - 19:11
குழந்தை மீது சுடுதண்ணீர் ஊற்றிய போதை ஆசாமி கைது..!

வியாசர்பாடியில் குடிபோதையில் டிபன் கடையில் ஏற்பட்ட தகராறில் மூன்று வயது குழந்தை மீது சுடு தண்ணீர் கொட்டி பலத்த காயம். போதை ஆசாமி கைது

சென்னை வியாசர்பாடி எருக்கஞ்சேரி ஹை ரோடு பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை 55. இவர் தனது வீட்டின் வெளியே நடைபாதையில் டிபன் கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணி அளவில் குடிபோதையில் இவரது கடைக்கு வந்த வியாசர்பாடி எருக்கஞ்சேரி ஹை ரோடு பகுதியை சேர்ந்த வசந்த் 19 என்ற நபர் சாப்பிடுவதற்கு தோசை கேட்டுள்ளார். அண்ணாதுரை தோசை தயார் செய்து கொடுத்த போது அவ்வழியாக சென்ற மனநிலை பாதிக்கப்பட்ட நபரிடம் குடிபோதையில் இருந்த வசந்த் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து, அண்ணாதுரை மற்றும் அவரது மனைவி சாந்தா ஆகிய இருவரும் தடுத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த வசந்த் டிபன் கடையில் இருந்த இட்லி பாத்திரத்தை எட்டி உரைத்தார்.  இது அருகில் நின்று கொண்டிருந்த அண்ணாதுரையின்  3 வயது பேரன் சர்வின்  என்ற குழந்தை மீது பட்டு இட்லி பாத்திரத்தில் இருந்த சுடுதண்ணீர் முழுவதும் குழந்தையின் வயிறு மற்றும் வயிற்றுக்கு கீழ் பகுதியில் அதிகளவில் பட்டு குழந்தை வலியால் துடிதுடித்தது. 

உடனடியாக அண்ணாதுரை மற்றும் அவரது உறவினர்கள் குழந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மேல் சிகிச்சைக்காக, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அங்கு  தீக்காயங்களுடன் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து வசந்த் 19 என்ற நம்பரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வசந்த் மீது வழக்கு பதிவு செய்த வியாசர்பாடி போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதையும் படிக்க |  தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியது.!

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow