தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்! முன்பதிவு தொடங்கியது.!

Feb 7, 2024 - 18:04
தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்!  முன்பதிவு தொடங்கியது.!

தை அமாவாசையை முன்னிட்டு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்து  இராமேஸ்வரத்திற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து  கழகம் தெரிவித்துள்ளது.

பொதுவாக அமாவாசை தினத்தன்று மக்கள் தங்களது முன்னோர்களை நினைவுகூறும் பொருட்டு,  தர்ப்பணம் கொடுத்தும், அன்னதானங்கள் வழங்கியும் முன்னோர்களை வழிபடுவர். எனவே, நீர்நிலைகளான கடல், ஆறு, ஏரி, குளம் போன்ற இடங்களில் தங்களது முன்னோர்களுக்காக படையல்கள் அளிக்கவும் , திதி கொடுப்பதற்கும் படையெடுக்கும் மக்களின் வரத்து அதிகமாகவே காணப்படும்.  

Rameshwaram tour package, Book Rameshwaram Holiday

இதனைக் கருத்தில் கொண்டு, வருகிற  தை அமாவாசை அன்று பல்வேறு இடங்களிலிருந்து பெரும்பாலான மக்கள்  புனித ஸ்தலமாக கருதப்படும்  ராமேஸ்வரத்துக்கு அதிகளவில் வருகை தர வாய்ப்புள்ளதால்,  இரண்டு தினங்களுக்கு சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்பு  பேருந்துகள் இயக்கப்படும் என  போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

TNSTC & SETC Bus Timings from Rameswaram Bus Stand | Ticket to Get Lost

அதன்படி, பிப்.9-ம் தேதி தை அமவாசியை முன்னிட்டு, வருகிற (வியாழக்கிழமை) பிப். 8-ம் தேதியன்று சென்னை கிளாம்பக்கத்திலிருந்தும் சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்தும் ராமேஸ்வரத்துக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதோடு,  பிப். 9-ம் தேதியான  தை அமாவாசையன்று  சென்னை கிளாம்பக்கம், சேலம், கோவை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களுக்கும் கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், மேற்கூறிய  இடங்களிலிருந்து  பயணம் செய்ய  https://www.tnstc.in/home.html

என்ற இணையதள முகரியிலும்,  tnstc official app  -ன் (https://play.google.com/store/apps/details?id=com.tnstc&hl=en&gl=US )

மூலமும்  முன்பதிவு செய்தி கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது.  

இதையும் படிக்க   |  "கீழடி அகழாய்வின் விரிவான அறிக்கை குறித்து மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” - உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow