Dude திரைபட பாடல் : இளையராஜாவுக்கு நீதிபதி கேள்வி
Dude திரைபட பாடல் விவகாரத்தில் இளையராஜா இசையமைத்த பாடல் இடம் பெற்ற தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. இதில் இளையராஜா தரப்பிடம் சராமரி கேள்விகளை நீதிபதி எழுப்பியுள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் தந்துள்ள 'டியூட்' படத்தில் ஒரு காட்சியில் நடிகை மமிதா பைஜூ இளையராஜா பாடல் ஒன்றிற்கு நடனமாடியிருந்தார். இந்தக் காட்சி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், அந்த இளையராஜா பாடல் மீண்டும் வைரல் ஆனது.
Dude திரைபடத்தில் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டுள்ள பாடல்களை நீக்க கோரி இசையமைப்பாளர் இளையராஜா உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் தனது அனுமதி இல்லாமல் பதிப்புரிமைச் சட்டத்தை மீறி பாடல்கள் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தனது பாடலை உருமாற்றி உள்ளனர்; பாடலுக்கான உரிமம் தங்களிடம் உள்ளது. பாடல்களின் உரிமம் பெற்றிருந்த சோனி நிறுவனத்திடம் இருந்து பாடல்களை பெற்றோம் என இளையராஜா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி, 30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போது கேட்டு ரசிப்பது ட்ரெண்டாகி வருகிறது.
இசையமைப்பாளர் இளையராஜா எப்படி பாதிக்கப்படுகிறார் என உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பினார்.
இதற்கு முன்பாக,நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தில் தன் அனுமதியில்லாமல், 'இளமை இதோ இதோ, ஒத்த ரூபாயும் தாரேன், என் ஜோடி மஞ்ச குருவி' ஆகிய பாடல்களை பயன்படுத்தி உள்ளதாக கூறி, இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 'குட் பேட் அக்லி' படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?

