முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ED ரெய்டு... 11 மணி நேரம் நீடித்த சோதனை நிறைவு...!
விஜயபாஸ்கர் வீட்டில் காலை 7 மணிக்கு தெடங்கிய சோதனை சுமார் 11 மணி நேரம் நீடித்துள்ளது
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அவரது வீட்டில் அமலாக்கத்துறையினர் 11 மணி நேரமாக சோதனை நடத்தினர்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சரும், விராலிமலை சட்டமன்ற உறுப்பினருமான டாக்டர் சி.விஜயபாஸ்கரின் தாய், தந்தை வசித்து வரும் இலுப்பூரில் உள்ள வீட்டில் இன்று (மார்ச் 21) காலை 7 மணி முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர்.
முன்னதாக, விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஆர்.கே.நகர் தேர்தல் பண பட்டுவாடா, குட்கா முறைகேடு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால் அவரது வீடு உள்ளிட்ட அவரக்கு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
காலை 7 மணிக்கு தெடங்கிய சோதனை சுமார் 11 மணி நேரம் நீடித்துள்ளது. சோதனைக்கு பின் பேசிய விஜயபாஸ்கரின் தந்தை, பாஜக தரும் அழுத்தத்தால் அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கலாம் என சந்தேகம் எழுப்பினார்.
கடந்த சில நாட்களுக்கு முன், விஜயபாஸ்கருக்கு சொந்தமான திருவேங்கை வாசலில் உள்ள கல்குவாரியில் அரசு அனுமதித்த அளவைவிட அதிகப்படியான கற்களை வெட்டி எடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அந்த குவாரியிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
What's Your Reaction?