“பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் தராமல் பழி வாங்குகிறது திமுக அரசு..” : - ஸ்டாலின் மீது எடப்பாடி தாக்கு 

பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் தராமல் திமுக அரசு பழி வாங்குவதாக முதல்வர் ஸ்டாலின் மீது எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

“பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் தராமல் பழி வாங்குகிறது திமுக அரசு..” : - ஸ்டாலின் மீது எடப்பாடி தாக்கு 
Edappadi attacks Stalin

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கட்சித் தலைமையகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் முந்தைய 10 ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட விலையில்லா மடிக்கணினி திட்டம் மூலம் பயனடைந்த இளைஞர்களுடன் கலந்துரையாடினார். 

மாணவர்கள் மத்தியில் எடப்பாடி பேசியதாவது ; 

“அற்புதமான நிகழ்ச்சி, மடிக்கணினி பயன் என்ன, அது கிடைக்காமல் மாணவர்கள் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையெல்லாம் உங்களுடன் கலந்துபேசியதன் மூலம் தெரிந்துகொண்டோம். 

திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் பலமுறை சட்டமன்றத்தில் மடிக்கணினியின் பயன்களை எடுத்துச்சொன்னோம், அதையெல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு இப்போது கொடுப்பதாகச் சொல்கிறார்கள். எங்கள் மீதிருக்கும் கோபத்தில் மாணவர்களைப் பழி வாங்காதீர்கள் என்று சொன்னோம். அடுத்தாண்டு தேர்தல் வருகிறது, மாணவர்கள் இளைஞர்களின் வாக்குகள் தேவை, அவர்களது செல்வாக்கை இழந்துவிட்டது, நல்ல பலன்களை திமுக அரசு முடக்கிவிட்டது. அந்தக் கோபத்தைத் தணிக்கும் விதமாக, ஓட்டுப்போடுகின்ற வயது கல்லூரி மாணவர்களுக்குத்தான். அதனால் 10 லட்சம் பேருக்கு மட்டும் கொடுப்பதாக அறிவித்துள்ளனர்.

கொடுப்பது வரவேற்கத்தக்கது, ஆனால் எப்போது கொடுக்க வேண்டும்.? கல்லூரி திறப்பதற்கு முன்பாகக் கொடுத்திருந்தால் கல்லூரி மாணவர்கள் எல்லாம் மடிக்கணினி வாங்கியிருக்க மாட்டார்கள். 5 மாதம் கழித்து கொடுப்பதாக அறிவித்துள்ளனர், இப்போது கொடுப்பதால் எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை ஏனெனில் அவர்கள் எல்லோரும் ஏற்கனவே லேப்டாப் வாங்கிவிட்டனர். இறுதியாண்டு படிக்கும் மாணவர்கள் இன்னும் இரண்டு மாதத்தில் முடித்துவிட்டு செல்வார்கள். இப்படித் திட்டமிடாமல் செய்வதால் மாணவர்களுக்குப் பலனில்லை. 

பள்ளி மாணவர்களுக்கு வாக்கு இல்லை என்பதால் கண்டுகொள்ளாமல் பழி வாங்குகிறார்கள். மக்களின் செல்வாக்கை இழந்ததால் மாணவர்களின் ஓட்டுக்காகத்தான் இப்போது கொடுக்கிறார்களே தவிர, மாணவர்களின் நலன் கருதி கொடுக்கவில்லை.

மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில்

நிகழ்வில் பங்கேற்ற மாணவர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாகப் பதிலளித்தார் எடப்பாடியார். 

கேள்வி : லேப்டாப் திட்டம் எப்படி கொண்டுவரப்பட்டது..?

எடப்பாடி பழனிசாமி  :  என்னென்ன திட்டம் கொண்டு வந்தால், மாணவர்கள் வளர்ச்சியடைவார்கள் என்று நினைத்து, அம்மா கொண்டு வந்த திட்டம் தான், லேப்டாப் திட்டம். அதனால் தான் நீங்கள் எல்லாம் வளர்ச்சி பெற்று இருக்கிறீர்கள். அதிமுக ஆட்சியை பெறுத்தவரை மாணவர்களுக்கு பொற்கால ஆட்சி என்று சொல்லலாம். அந்த அளவிற்கு, குறிப்பாக அரசு பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு, ஏழை குடும்பத்தில் வளர்ந்த, நடுத்தர, விவசாய குடும்பத்தில் பிறந்த குழந்தைகள் தான், அதிக அளவில் படிக்கிறார்கள். இதை எல்லாம் அம்மா நினைத்து, அந்த மாணவர்களின் கனவு நினைவாக,தனியார் பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு இணையாக, அரசு பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கும் அறிவுத்திறன் கிடைக்க வேண்டும் என்று எண்ணிதான், லேப்டாப்பை கொடுத்தார்கள். தாய் தனது குழந்தைக்கு என்னென்ன செய்வாரோ அதேபோல், அரசு பள்ளியில் படிக்கிற மாணவர்களுக்கு ஏராளமான திட்டங்களை கொண்டுவந்தவர் ஜெயலலிதா.

இது போன்ற கலந்துரையாடலின் போது மாணவர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு எடப்பாடி பழனிசாமி பதிலளித்தார். 

வைரலாகும், ’வேர் இஸ் அவர் லேப்டாப்..?’ ஹேஸ்டேக்

ஏழை எளிய மாணவர்களுக்கு அறிவுப்பூர்வமான கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அடுத்துவந்த அம்மா ஆட்சியில் எடப்பாடி பழனிசாமியும் கொடுத்த லேப்டாப் திட்டத்தை, இப்போது தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக மட்டும் திமுக கொடுக்கத் தொடங்கியிருப்பது, மாணவர்களிடையே பெரும் விழிப்புணர்வை உண்டாக்கியுள்ளது. இதையடுத்து, ‘வேர் இஸ் அவர் லேப்டாப்?’ என்ற ஹேஸ்டேக் வைரலாகியுள்ளது. 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow