நிலநடுக்கம் - உருக்குலைந்த தைவான்... உலக செமிகண்டக்டர் உற்பத்தி பாதிப்பா..?

25 ஆண்டுகளில் இல்லாதளவுக்கு தைவானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், ஜப்பானுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகின் செமிகண்டக்டர் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றும் தைவான், உருக்குலைந்துள்ள நிலையில், விளைவுகள் என்ன என்பது தொடர்பாக இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்...

Apr 3, 2024 - 11:56
நிலநடுக்கம் - உருக்குலைந்த தைவான்... உலக செமிகண்டக்டர் உற்பத்தி பாதிப்பா..?

தைவானின் ஹுவாலின் நகருக்கு தெற்கே 18 கிலோ மீட்டர் தொலைவில் அதிகாலை 5.30 மணிக்கு 15 கிலோமீட்டர் ஆழத்தில் 7.4 என்ற ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.தைவானே மிகச்சிறிய தீவு என்ற பட்சத்தில் கட்டடங்கள் குலுங்கிய பதைபதைபக்க வைக்கும் காட்சிகள் வெளியாகின. சாலைகளில் மக்கள் நின்று கொண்டிருந்தபோதே கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.சாலைகளில் பெரும் அதிர்வுகள் உணரப்பட்ட நிலையில், பாலங்களும் குலுங்கிய நிகழ்வு, காண்போரை அதிர்ச்சியில் உறையச் செய்தது.

இதேபோன்று, நீச்சல் குளங்கள், மைதானங்கள் உள்ளிட்டவற்றிலும், நிலநடுக்கத்தால் அனைவரும் அஞ்சி ஓடிய காட்சிகளும் வெளியாகின. தண்டவாளங்களில் நிறுத்தப்பட்ட ரயில்களும் குலுங்கி சாய்ந்தன.மக்கள் சென்று கொண்டிருந்தபோதே கட்டடங்கள் இடிந்து விழுந்ததும், நிலநடுக்கத்தால் சில வீடுகள் பாதி சாய்ந்தபடி நின்ற சம்பங்களும் அரங்கேறின.கடல் கொந்தளிப்புடன் காணப்பட்ட நிலையில், அப்பகுதியில் இருந்த குளங்கள் - ஏரிகளும் அசாத்திய நிலையில் காணப்பட்டன.1999-ம் ஆண்டு 7.2 என்ற ரிக்டர் அளவில், இதே நகரில் நிலநடுக்கம் ஏறப்ட்ட போது, 2,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், 25 ஆண்டுகளுக்குப்பின் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கக் கூடும் என்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்படுகிறது.

இந்த சக்திவாய்ந்த நில நடுக்கத்தைத் தொடர்ந்து, ஜப்பான், பிலிப்பைன்சில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, சுனாமி அபாயம் பெருமளவு நீங்கிவிட்டதாக புவியியல் ஆய்வு மையங்கள் தெரிவித்துள்ளன.

கணினி சிப் தயாரிப்பு நிறுவனமான தைவானின் செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனம் TSMC மற்றும் ஆப்பிள் ஐஃபோன் பாகங்களை உற்பத்தி செய்யும் foxconn நிறுவனங்கள், உலகப் பொருளாதாரத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன. தொடர்ந்து TSMC, தனது ஊழியர்களின் பாதுகாப்புக்காக சின்ச்சு, தெற்கு தைவானில் உள்ள சில தொழிற்சாலைகளை காலி செய்துள்ளதாக முன்னதாக அறிவித்தது. பாதுகாப்பு அமைப்புகள் எப்போதும் போல் இயங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பாதுகாப்பு கருதி தொழிற்சாலைகளில் இருந்து பணியாளர்களை வெளியேற்றப்பட்டதாகவும், தற்போது அவர்கள் பணியிடங்களுக்கு திரும்ப தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தயாரிப்பு நடவடிக்கைகளில் நிலநடுக்க பாதிப்புகள் எந்தளவு உள்ளன என்பது தொடர்பாக இரு நிறுவனங்களும் பதிலளிக்கவில்லை. NIKE, Adidas போன்ற உலகளாவிய ஆடை பிராண்டுகளுக்கு தைவான் நிறுவனங்கள் பொருட்களை விநியோகம் செய்யும் நிலையில், சர்க்யூட் போர்டுகள், மேம்பட்ட கேமரா சென்ஸார்கள் உள்ளிட்ட பாகங்களையும் உற்பத்தி செய்கின்றன... அமேசான் கிண்டில், நிண்டெண்டோ, சோனி நிறுவனங்களுக்கான வீடியோ கேம் சாதனங்கள் உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் foxconn தயாரிக்கிறது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow