வெள்ள நிவாரணம்.. மத்திய அரசுக்கு எதிராக மல்லுக்கட்டும் தமிழக அரசு.. சுப்ரீம் கோர்ட்டில் மனு
வெள்ள நிவாரண நிதி வழங்காத மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது. தமிழ்நாட்டிற்கான வெள்ள பேரிடர் மீட்பு நிதி ரூ.2000 கோடி வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் உருவான மிக்ஜாம் புயலால் சென்னையில் பெருமழை பெய்து வெள்ளம் சூழ்ந்தது. 3 நாட்கள் இடைவிடாமல் கொட்டித்தீர்த்த தொடர்மழையால் பல பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்தது. புறநகர் பகுதிகள் மட்டுமல்லாது நகர் பகுதிகளிலும் வெள்ளம் தேங்கியது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் அளித்தது தமிழ்நாடு அரசு.
வெள்ள சேதத்தை கணக்கிட மத்திய குழுவினர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்தனர். தமிழக அரசு சீரமைப்புபணிகளுக்காக பல ஆயிரம் கோடி ரூபாய் நிவாரணமாக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தது. இதுவரை மத்திய அரசு ஒரு பைசா கூட தரவில்லை என்று தமிழ்நாடு அரசு குற்றம் சாட்டி வருகிறது. அதே நேரத்தில் முன்பே 5000 கோடி ரூபாய் கொடுத்து விட்டதாக மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர்.
நேற்று மதியம் பதிலளித்திருந்ததும் இங்கே கவனிக்கத்தக்கது. அதில் அவர், தமிழகத்தில் மிக்ஜாம் புயல், மழை வந்தவுடனே 950 கோடி நிதி தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழக பேரிடர் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டது. வெள்ள பாதிப்புகளை சீர்செய்ய சென்னைக்கு 5000 கோடி நிதி முன்கூட்டியே வழங்கப்பட்டது.
அதை சரியாக பயன்படுத்தி இருந்தால் சென்னை நகரம் மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டிருக்காது. அந்த 5 ஆயிரம் கோடி எப்படி செலவிடப்பட்டது என்று தமிழக அரசு கூற வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இந்தநிலையில் வெள்ள நிவாரண நிதி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை நாட இருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்திருந்தார். இந்த நிலையில் வெள்ள நிவாரண நிதி வழங்வில்லை எனக் குறிப்பிட்டு மத்திய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.
இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கான வெள்ள பேரிடர் மீட்பு நிதி ரூ.2000 கோடி வழங்க உத்தரவிடக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் வில்சன் பெயரில், தமிழ்நாடு அரசு வழக்கறிஞராக இருக்கும் குமணன் இந்த மனுவைத் தாக்கல் செய்துள்ளார். ஏற்கனவே வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம் எழுந்தியிருந்த நிலையில், தற்போது அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து தமிழ்நாடு என்ன மாதிரியான இயற்கை பேரிடர்களை சந்தித்தது என சுட்டிக்காட்டியுள்ளனர். ஏற்கெனவே கேரள அரசு மத்திய அரசுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மனு ஐந்து நீதிபதிகள் அமர்வில் விசாரணையில் நிலுவையில் இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசும் புதிய மனுவைத் தாக்கல் செய்துள்ளது.
What's Your Reaction?