புதிய உச்சத்தில்  முட்டை விலை : ஆம்லெட், முட்டை தோசை, பெடிமாஸ் விலை உயர்த்த ஹோட்டல்கள் திட்டம் 

தங்கம் விலை நாளுக்கு நாள் எப்படி அதிகரித்து வருகிறாதே அது போல முட்டை விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் ஆம்லெட் பிரியர்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

புதிய உச்சத்தில்  முட்டை விலை : ஆம்லெட், முட்டை தோசை, பெடிமாஸ் விலை உயர்த்த ஹோட்டல்கள் திட்டம் 
Egg prices at new high

தமிழகத்தின் முட்டை உற்பத்தி கேந்திரமாக விளங்கும் நாமக்கல் மாவட்டத்தில் 1,100 க்கு மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இவற்றின் மூலம் நாள்தோறும் 6  கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. மொத்த உற்பத்தியில் 40 சதவீத முட்டைகள் கேரள மாநிலத்திற்கும், தற்போது தினசரி  1 கோடி முட்டைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி ஆகின்றன. தமிழக  அரசின் சத்துணவுத் திட்டத்திற்கு போக மீதமுள்ள முட்டைகள் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பபட்டு வருகிறது.

முட்டை ஒன்றின்  பண்ணைக் கொள்முதல் விலையான ரூ.6.35 ல்  இருந்து 5  காசுகள் உயர்த்தி ரூ. 6.40 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு இன்று (22-12-2025) மாலை அறிவித்துள்ளது. இந்த விலை நாளை (23-12-2025) காலை முதல் அமலுக்கு வருகிறது.

முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ 6.40 ஆக நிர்ணயக்கப்பட்டுளதால் 55 ஆண்டு கால தமிழக கோழிப் பண்ணை வரலாற்றில் மேலும் புதிய உச்சத்தை அடைந்துள்ளது. கடந்த 3 நாட்களில் முட்டை விலை 15 காசுகள் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

முட்டையின் நுகர்வும் , விற்பனையும் அதிகரித்துள்ளது. பிற மண்டலங்களிலும் முட்டை விலை உயர்ந்து வருகிறது. மேலும் கோழித்தீவன மூலப்பொருட்கள் விலையும் உயர்ந்துள்ளது. வழக்கமாக குளிர்காலம் தொடங்கியவுடனே விலை உயர்வது வாடிக்கையான ஒன்று. இதுவே விலை முட்டை விலை உயர்வு க்கு காரணம் மேலும் வரும் நாட்களில் விலை உயர வாய்ப்புள்ளது என்கின்றனர் நாமக்கல் முட்டை பண்ணையாளர்கள். நாள்தோறும் உயர்ந்துவரும் முட்டை விலையால், தள்ளுவண்டி கடை, ஹோட்டல்களில் ஆம்லெட், பெடிமாஸ், முட்டை தோசை போன்றவைகளையும் விலை உயரக்கூடும் என்பதால் முட்டை ப்ரியர்கள் கொஞ்சம் அப்செட் ஆகியுள்ளனர். 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow