தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் : நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரும், கார் ரேஸிங் வீரருமான நடிகர் அஜித்குமாரின் ரேஸிங் வாழ்க்கை குறித்த ஆவணப்படத்தின் டீஸர் தற்போது வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தல ரசிகர்களுக்கு ஹாப்பி நியூஸ் :  நடிகர் அஜித்குமார் ரேஸிங் வாழ்க்கை ஆவணப்பட டீஸர் வெளியிடு 
Actor Ajith Kumar's racing life documentary teaser released

அஜித்தின் பந்தயப் பயணம்

அஜித்குமார், நடிப்பைத் தாண்டி கார் ரேஸிங்கில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு முதல் கார் ரேஸிங்கில் தீவிர கவனம் செலுத்தி வரும் அவர், 'அஜித்குமார் ரேஸிங்' என்ற தனது சொந்த குழுவை உருவாக்கியுள்ளார். இந்தக் குழு துபாய், பெல்ஜியம் போன்ற நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்துள்ளது. 

அண்மையில், மலேசியாவில் நடைபெற்ற கார் ரேஸிலும் அவர் தன் குழுவினருடன் கலந்துகொண்டார். மேலும், ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில் அஜித்குமார் 3-வது இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. அடுத்த ஆண்டில் (2026) அபுதாபியில் நடைபெறும் கார் பந்தயப் போட்டிகளிலும் அஜித்குமார் ரேஸிங் அணி பங்கேற்கிறது.

ஆவணப்படத்தின் தலைப்பும் வெளியீடும்

அஜித்குமாரின் இந்த கார் ரேஸிங் பயணம் ஆவணப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. 'Racing Isn't Acting' என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கியுள்ளார்.

தற்போது இந்த ஆவணப் படத்தின் டீஸர் வெளியாகி, அஜித்தின் ரேஸிங் பயணத்தின் தீவிரத்தையும் அனுபவத்தையும் வெளிப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அஜித்துக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்

சினிமா வெற்றிகள் ஒருபுறம் இருக்க, அஜித்குமாரின் ரேஸிங் திறமைக்கு சர்வதேச அங்கீகாரமும் கிடைத்துள்ளது. பிலிப் சாரியட் மோட்டார்ஸ்போர்ட் சார்பில் இத்தாலியின் வெனிஸ் நகரத்தில் இந்த ஆண்டுக்கான "GENTLEMAN DRIVER OF THE YEAR 2025" என்ற ஜென்டில்மேன் ஓட்டுநர் விருது அஜித்துக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow