எண்ணூரில் உரத் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி முழு கடை அடைப்பு!!!

எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடைகள் அடைக்கப்பட்டுள்ளது.

Feb 6, 2024 - 11:47
எண்ணூரில்  உரத் தொழிற்சாலையை மூட வலியுறுத்தி முழு கடை அடைப்பு!!!

எண்ணூர் பெரிய குப்பம் பகுதியில் கோரமண்டல் உரத் தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் 26ஆம் தேதி இரவு ஏற்பட்ட அமோனியா கசிவு பாதிப்பால் கோரமண்டல் தொழிற்சாலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 42 வது நாளாக எண்ணூர் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

 தொழிற்சாலை கடந்த 42 நாட்களாக இயங்காமல் மூடி வைக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இன்று 33 மீனவ கிராமத்தில் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை ஒரு நாள் முழு கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து இன்னொரு பகுதியில் ஆறு இடங்களில் சாலை மறியலில் 33 கிராம மக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் எண்ணூரில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகள் பெரிதும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனால் எண்ணூர் முழுவதும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி எண்ணூர் பகுதி ஸ்தம்பித்து, இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டு வருகிறது. 

இது குறித்து பசுமை தீர்ப்பாயத்தில் இன்று வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில் பொதுமக்கள்  சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில்,எண்ணூர் பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow