தாமரை சின்னத்தை எதிர்த்து வழக்கு தொடர்வேன் – சீமான் ஆவேசம்!
தேர்தல் முடிந்தவுடன் பாஜகவிற்கு தாமரை சின்னம் தரக்கூடாது என்று வழக்கு தொடர்வேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
தேர்தல் முடிந்தவுடன் பாஜகவிற்கு தாமரை சின்னம் தரக்கூடாது என்று வழக்கு தொடர்வேன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆவேசமாகப் பேசியுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் உயிரிழந்ததை அடுத்து அவருக்கு நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை அலுவலகத்தில் புகழ் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கிய சீமான் சாந்தன் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டு 30 ஆண்டுகள் மேல் சிறையில் வாடி விடுதலை அடைந்து உயிரிழந்த சகோதரருக்கு அஞ்சலி செலுத்தி உள்ளதாகக் கூறினார்.
தொடர்ந்து, விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், குறிப்பிட்ட அளவு வாக்கு பெற்றுள்ள கட்சிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என விதி உள்ளது. ஆனால், புதிதாகக் கட்சி தொடங்கிய ஒருவர் சின்னம் கேட்டதும் அவசர அவசரமாகக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும், தன்னை முடக்குவதற்காகவே இப்படி ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறினார். மயில் சின்னத்தை கேட்டபோது தேசியப் பறவை எனக் கொடுக்க மறுக்கப்பட்டது. ஆனால் தேசிய மலர் தாமரை பாஜகவிற்கு சின்னமாகக் கொடுக்கப்பட்டது ஏன்? முதலில் பாஜகவின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். ஒன்று தேசிய மலரை மாற்றுங்கள் அல்லது கட்சி சின்னத்தை மாற்றுங்கள் எனக் கோரி தேர்தல் முடிந்த பின் வழக்கு தொடர்வேன் என சீமான் கூறினார்.
What's Your Reaction?